clinically dead for 8 minutes usa women miraculously comes back
ப்ரியானா லாஃபர்ட்டிஎக்ஸ் தளம்

அமெரிக்கா | உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட பெண்.. அடுத்த 8 நிமிடங்களில் உயிர் பிழைத்த அதிசயம்!

அமெரிக்காவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் ஒருவர், அடுத்த 8 நிமிடங்களில் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ப்ரியானா லாஃபர்ட்டி. 33 வயது நிரம்பிய இந்தப் பெண்மணி உயிருக்கு ஆபத்தான நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடலில், குறிப்பாக 8 நிமிடங்கள் வரை எந்தத் துடிப்பும் இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் மூச்சு இல்லாமலும், மூளை செயல்பாடு இல்லாமலும் இருந்துள்ளார். இதனால், அவர் உயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த 8 நிமிடங்களுக்குப் பிறகு அவர் உயிர் வந்துள்ளது. இது, மருத்துவ உலகத்தையே அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

clinically dead for 8 minutes usa women miraculously comes back
ப்ரியானா லாஃபர்ட்டிஎக்ஸ் தளம்

’மயோக்ளோனஸ் டிஸ்டோனியா' என்ற அரிய நரம்பியல் கோளாறுதான் அவரை, மரணத்திற்கு மிக அருகில் அழைத்துச் சென்றதற்கான முதல் காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மூளை செயல்பாடு காரணமாக ஏற்படும் நரம்பியல் நிகழ்வுகள் அவரை மரணத்திற்கு மிக அருகில் அழைத்துச் சென்றுள்ளதாக அவர்கள் நம்புகின்றனர். இந்த நிலை, உடல் செயல்பாடுகளைச் சீர்குலைத்து, தன்னிச்சையான தசை அசைவுகளை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

clinically dead for 8 minutes usa women miraculously comes back
பஹல்காம் தாக்குதல் | சின்ன தாமதங்களால் தள்ளிப்போன பயணம்.. நூலிழையில் உயிர் பிழைத்த நபர்கள்!

இந்த கோளாறு முக்கியமாக கழுத்து, தண்டு மற்றும் மேல் மூட்டுகளை பாதிக்கிறது. அதேநேரத்தில் வேறு சிலருக்கு இதன் அறிகுறிகள் மாறுபடும். மயோக்ளோனஸ் டிஸ்டோனியாவுக்கு எந்த சிகிச்சையும் இல்லை என்றாலும், கிடைக்கக்கூடிய சிகிச்சைகள் அறிகுறிகளைக் குறைக்க உதவும். வாய்வழி மருந்துகள் , சிகிச்சைகள் மற்றும் போட்லினம் நியூரோடாக்சின் ஊசிகள் மருத்துவச் சிகிச்சைகளை ஆதரிக்கின்றன.

clinically dead for 8 minutes usa women miraculously comes back
ப்ரியானா லாஃபர்ட்டிஎக்ஸ் தளம்

இதிலிருந்து மீண்ட ப்ரியானா, “மரணம் என்பது ஒரு மாயை. ஏனென்றால், நமது ஆன்மா ஒருபோதும் இறக்காது. நமது உணர்வு உயிருடன் உள்ளது. மேலும் நமது சாராம்சம் வெறுமனே மாறுகிறது. நான், என் மனித உடலின் அசைவுகளைப் பார்க்கவோ நினைவில் கொள்ளவோ ​​இல்லை. நான் முற்றிலும் அசையாமல் இருந்தேன். ஆனாலும் நான் முழுமையாக உயிருடன், விழிப்புணர்வுடன், முன்பைவிட அதிகமாக இருப்பதாக உணர்ந்தேன். உண்மையில், நான் உடலிலிருந்து திடீரெனப் பிரிக்கப்பட்டேன்” எனப் பதிலளித்துள்ளார்.

clinically dead for 8 minutes usa women miraculously comes back
புதின் சென்ற ஹெலிகாப்டர்.. திடீரென உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. நூலிழையில் உயிர் பிழைப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com