putin survived an assassination attempt ukrainian drone attack
விளாடிமிர் புதின்x page

புதின் சென்ற ஹெலிகாப்டர்.. திடீரென உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. நூலிழையில் உயிர் பிழைப்பு!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சென்ற ஹெலிகாப்டரை குறிவைத்து உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியுள்ளது.
Published on

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சென்ற ஹெலிகாப்டரை குறிவைத்து உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியுள்ளது.

putin survived an assassination attempt ukrainian drone attack
விளாடிமிர் புதின்எக்ஸ் தளம்

நேற்று நள்ளிரவுக்குப் பிறகு புதின் பதற்றமான எல்லைப் பகுதியான குர்ஸ்க்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் ரஷ்யா, உக்ரேனியப் படைகளை குர்ஸ்க் பகுதியிலிருந்து விரட்டியடித்ததாக அறிவித்த பிறகு, புதின் அப்பகுதிக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.

புதினின் ஹெலிகாப்டர் பாதையில் உக்ரைனால் ஏவப்பட்ட ஒரு ஆளில்லா விமானம், ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிபர் ஹெலிகாப்டர் வானில் பறந்து கொண்டிருக்கும்போதே அதைத் தாக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து அநாட்டுப் பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. எனினும், இந்தக் கூற்றுகளுக்கு உக்ரைன் இன்னும் பதிலளிக்கவில்லை.

putin survived an assassination attempt ukrainian drone attack
ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் | விமானச் சேவைகள் நிறுத்தம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com