chinese village uses fake cotton snow to attract tourists
சீனாஎக்ஸ் தளம்

சீனா | பருத்தி பஞ்சு, சோப்பு நுரையில் பனிப்பொழிவு.. ஏமாற்றமடைந்த சுற்றுலாப் பயணிகள்!

சீனாவில் உள்ள சுற்றுலாத் தலம் ஒன்று சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக பருத்தி பஞ்சு மற்றும் சோப்பு நுரையை கொண்டு பனிப்பொழிவு இருப்பதுபோல் ஏமாற்றியுள்ளது.
Published on

சீனாவில் உள்ள சுற்றுலாத் தலம் ஒன்று சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக பருத்தி பஞ்சு மற்றும் சோப்பு நுரையை கொண்டு பனிப்பொழிவு இருப்பதுபோல் ஏமாற்றியுள்ளது.

chinese village uses fake cotton snow to attract tourists
சீனாஎக்ஸ் தளம்

இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளுக்கும் பனிப் பொழிவிற்கும் பெயர் பெற்றது, தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் அமைக்கப்பட்ட செங்டு கிராமம். இந்த ஆண்டு காலநிலை மாற்றத்தால் போதுமான பனியை அக்கிராமம் பெறவில்லை. இருப்பினும், பனியைக் காணாமல் சுற்றுலாப் பயணிகளைத் திருப்பி அனுப்புவதில்லை என்பதில் அந்தக் கிராமம் உறுதியாக இருந்தது. சுற்றுலாப் பயணிகளைத் தக்கவைத்துக்கொள்ள ஒரு புதுமையான முயற்சி செய்தது.

பருத்தி பஞ்சு மற்றும் சோப்பு நுரையைக் கொண்டு பனிப்பொழிவு இருப்பதுபோல் காட்டினர். பனிப்பொழிவு அதிகம் இருப்பதாக அதை நம்பிச் சென்ற சுற்றுலாப் பயணிகள் அங்குச் சென்ற பின்னர் ஏமாற்றமடைந்தனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து அந்த சுற்றுலா தலம் தற்காலிகமாக மூடப்பட்டது. பின்பு தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பனிப்பொழிவு இல்லாததால் இவ்வாறு செய்ததாக நிர்வாகம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியுள்ளது.

chinese village uses fake cotton snow to attract tourists
சீனா | உயிரைக் காப்பாற்றிய குதிரைக்கு நேர்ந்த சோகம்.. சிலை வைக்கும் நகர நிர்வாகம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com