சீனா
சீனாமுகநூல்

விடுப்பு இல்லாமல் உழைத்த ஊழியர்களுக்கு சீன உணவக உரிமையாளர் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்..!

சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டின் படி, தென்மேற்கு சீனாவில் உள்ள கிலிச்சுவான் ஹாட்ஸ்பாட் உணவகத்தின் உரிமையாளரான ஹூவாங் ஹூமிங் என்பவர்தான் இந்த தாராள மனதை படைத்தவராக இருக்கிறார்.
Published on

சீனப்புத்தாண்டை முன்னிட்டு, விடுப்பு எடுக்காமல் உழைத்த ஊழியர்களை ஊக்கப்படும் விதமாக நிறுவனத்தின் லாபத்தில் இருந்து சுமார், ரூ. 64 லட்சத்தை பகிர்ந்து அளித்துள்ளது ஒரு உணவகம். இந்த செய்தி தற்போது டாக் ஆஃப் தி டவுனாக மாறியுள்ளது.

அதிக வேலை வாங்கிக்கொண்டு , செய்த வேலைக்கேற்ற ஊதியம் கொடுக்காமல் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் நிறுவனங்களுக்கு மத்தியில் தனக்கு கிடைத்த லாபத்தில் ஊழியர்களுக்கும் பங்கு கொடுத்திருக்கும் சீன நபருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டின் படி, தென்மேற்கு சீனாவில் உள்ள கிலிச்சுவான் ஹாட்ஸ்பாட் உணவகத்தின் உரிமையாளரான ஹூவாங் ஹூமிங் என்பவர்தான் இந்த தாராள மனதை படைத்தவராக இருக்கிறார்.

சீனாவில் எட்டு கிளைகளை கொண்டு இயங்கும் ஹூவாங்கின் உணவகத்தில், சீனாப்புத்தாண்டு அன்று கூட்டம் கலைக்கட்டியுள்ளது.

அதிகமான மக்கள்கூட்டம் வரும் என்று முன்னதாக புரிந்துகொண்ட ஊழியர்கள் விடுமுறை எடுக்காமல் உணவகத்திற்கு வந்து வேலை பார்த்துள்ளனர். இதனால், மூன்று நாட்களில் மட்டும் ரூ.1.2 கோடிக்கும் அதிகமாக விற்பனை நடந்துள்ளது. இந்நிலையில், அதிக விற்பனையை நிகழ்த்தி காட்டிய ஊழியர்களை கௌரவப்படுத்தும் விதமாக, ஒரு திட்டத்தை தீட்டியுள்ளார் உணவகத்தின் உரிமையாளர்.

சீனா
OpenAI நிறுவனத்தை விலை பேசிய எலான் மஸ்க்.. பதிலடி கொடுத்த சாம் ஆல்ட்மேன்!

இதன்படி, அதிக வருமானம் ஈட்டிய கிளையின் மேலாளர்களுக்கு ரூ .2.18 லட்சம் வரையும், வேறு ஊழியர்களுக்கு ரூ 84000 மும் உழைப்புக்கான சன்மானமாக கொடுத்துள்ளார். மேலும், குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களுக்கும் ரூ 7200 - 8400 வரை போனஸாக வழங்கப்பட்டுள்ளது. இப்படி ரூ.64 லட்சம் போனஸாக கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த ஹூவாங், “ ஊழியர்களை உற்சாகப்படுத்தவும், மகிழ்ச்சியாக அவர்கள் புத்தாண்டினை கொண்டாட வேண்டும் என்றும் நாங்கள் விரும்பினோம். ஆண்டு முழுவதும் கடினமாக உழைத்தவர்களான மரியாதையே தவிர, இது எந்த விளம்பர நோக்கத்திற்காகவும் கொடுக்கப்படவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த உணவகத்தில் 200 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில், விடுமுறை எடுக்காமல் வந்த 140 பேருக்கு போனஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

சீனா
30 க்கும் மேற்பட்ட துறைகளில் கால்பதித்திருக்கும் அதானி குழுமம்..!

இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படியும் ஒரு ஓனரா என சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com