அதானி குழுமம்
அதானி குழுமம்முகநூல்

30 க்கும் மேற்பட்ட துறைகளில் கால்பதித்திருக்கும் அதானி குழுமம்..!

துறைமுகம், விமான நிலையம், ராணுவம், ஆற்றல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட துறைகளில் கால் பதித்துள்ள அதானி குழுமம் தற்போது மருத்துவத்துறையில் முதலீடு செய்கிறது.
Published on

செய்தியாளர் பால வெற்றிவேல்

துறைமுகம், விமான நிலையம், ராணுவம், ஆற்றல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட துறைகளில் கால் பதித்துள்ள அதானி குழுமம் தற்போது மருத்துவத்துறையில் முதலீடு செய்கிறது.

மும்பை மற்றும் அகமதாபாத்தில் தலா 1,000 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்காக 6,000 கோடி ரூபாயை அதானி குழுமம் முதலீடு செய்யவுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதானியின் பிறந்த நாளின் போது சுகாதாரம் மற்றும் கல்வி மேம்பாட்டை அதிகரிக்கும் வகையில் 60 ஆயிரம் கோடி இந்த துறைகளில் முதலீடு செய்யப்படும் என அதானி அறிவித்திருந்தார். தற்போது மும்பை மற்றும் அகமதாபாத்தில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு அதானி குழுமம் ஒதுக்கியுள்ளது.

கௌதம் அதானியின் இரண்டாவது மகன் திருமணத்தின் போது இந்த அறிவிப்பை அதானி வெளியிட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான மாயோ கிளினிக் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கும் என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

அதானி குழுமம்
நொறுக்குத்தீனி உட்கொள்ளும் பழக்கம் அதிகரிப்பு - பாஜக எம்.பி சுஜித்குமார்!

அதானி சுகாதார நகரம் என அழைக்கப்படும் இந்தத் திட்டத்தில் இந்திய சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் மலிவு விலையில் உலகத் தரம் வாய்ந்த சுகாதாரத்தை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கௌதம் அதானி தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 1,000 படுக்கைகள் கொண்ட பல சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், ஆண்டுக்கு 150 இளங்கலை மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. புதிய

நோய்களுக்கான மருத்துவ ஆராய்ச்சி, உயர் மருத்துவ தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பட்ட மருத்துவம் வழங்கப்படும் என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com