\
Chinese model Kimi K3 adds pressure on India
model imagechatgpt

‘இனி, ரகசியங்கள் திருடப்படலாம்..’ இந்தியாவுக்குச் சிக்கலை உண்டாக்கிய சீனா.. புதிய AI கண்டுபிடிப்பு!

இந்தியா விரைவில், சொந்தமாக சூப்பர் கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மட்டுமே இதற்கான நிரந்தரத் தீர்வாக அமையும் என்கின்றனர் வல்லுநர்கள்.
Published on

அமெரிக்காவை மிஞ்சுகின்ற அளவுக்கு சீனா பல கண்டுபிடிப்புகளை இந்த செயற்கை நுண்ணறிவு துறையில் செய்துகாட்டி வருகிறது. இந்த நிலையில், சீனா உருவாக்கியுள்ள ’கிமி’ (Kimi) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரி, இந்தியாவுக்குத் தொழில்நுட்ப ரீதியாகவும் புவிசார் அரசியல் ரீதியாகவும் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுதும் உருவாக்கப்படும் புதிய செயற்கை நுண்ணறிவுகளால் உலகமே தலைகீழாக இயங்கிவருகிறது. மேலும், ஒன்றை முறியடிக்க, மற்றொரு புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டு வருவது உலகம் முழுதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்தகைய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பதில் அமெரிக்காவும் சீனாவும் முன்னிலையில் இருக்கின்றன. எனினும், அமெரிக்காவை மிஞ்சுகின்ற அளவுக்கு சீனா பல கண்டுபிடிப்புகளை இந்த செயற்கை நுண்ணறிவு துறையில் செய்துகாட்டி வருகிறது.

இந்த நிலையில், சீனாவைச் சேர்ந்த மூன்ஷாட் ஏஐ (Moonshot AI) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள கிமி (Kimi) செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரி, சர்வதேச ஏஐ சந்தையில் மிகப் பெரிய அலைகளை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவிடம், இதேபோன்ற உலகின் மிகவும் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு மாதிரி என்று சொல்லக்கூடிய ஆந்த்ரோபிக் மித்தோஸ் ஏஐ உள்ளது. ஆனால், சீனாவிடம் அதே அளவு சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு மாதிரி என்று சொல்லக்கூடிய கிமி கே3, அதாவது கிமி 3.0 உள்ளது. கிமி AIஇல் (Kimi K3) 2.8 டிரில்லியன் அளவுருக்களைப் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மிகப்பெரிய அளவிலான தகவல்கள், கணக்கீடுகள் மற்றும் மென்பொருள் கோடிங் பணிகளை மனித தலையீடு இன்றி மிகத் துல்லியமாகச் செய்ய முடியும்.

இதையும் படிக்க: அதானிக்காக களமிறங்கும் மத்திய அரசு.. இண்டிகோ, ஏர் இந்தியா ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி!

Chinese model Kimi K3 adds pressure on India
கடலுக்கடியில் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை.. புதிய மைல்கல்லைத் தொட்ட சீனா!

சீனா இந்த மாடலை 'Open-Weight' ஆக வெளியிடுவதால், உலகம் முழுவதிலும் உள்ள உருவாக்குநர்கள் (Developers) இதை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து தங்களின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ள முடியும். மறுபுறம், அமெரிக்க நிறுவனங்களான OpenAI மற்றும் Anthropic ஆகியவற்றிற்கு ஈடுகொடுக்கும் வகையில் இது அதிவேகமாக வளர்ச்சி அடைந்துள்ளதால், இது இந்தியாவுக்குத் தொழில்நுட்ப ரீதியாகவும் புவிசார் அரசியல் ரீதியாகவும் புதிய தலைவலியாகவும் சவாலாகவும் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவும் சீனாவும் பில்லியன் கணக்கில் முதலீடு செய்து சொந்தமாக அதிநவீன ஏஐ அடிப்படை மாதிரிகளை உருவாக்கி வருகின்றன. ஆனால், இந்தியா பெரும்பாலும் வெளிநாட்டு ஏஐ மாதிரிகளையே (API) நம்பியிருக்கும் சூழல் உள்ளது. சீனா ஏஐ துறையில் அடைந்து வரும் இந்த அதிவேக வளர்ச்சி, இரு நாடுகளுக்கும் இடையேயான தொழில்நுட்ப இடைவெளியை மேலும் அதிகமாக்குகிறது.

இது, இந்திய ஏஐ சுற்றுச்சூழல் சீனத் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கும். இன்னொரு புறம், கிமி போன்ற ஏஐ மாதிரிகள் சிக்கலான மென்பொருள் பயன்பாடுகளை நொடிகளில் உருவாக்கும் திறன் கொண்டவை. இதனால் இந்திய ஐடி துறையில் உள்ள வழக்கமான பணி வாய்ப்புகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். சீன நிறுவனங்களின் ஏஐ மாதிரிகளைப் பயன்படுத்தும்போது, பயனர்களின் தரவுகள் மற்றும் ரகசியத் தகவல்கள் சீனச் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுச் சேகரிக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது. மேலும், இந்தியப் பயனர்களிடம் எல்லைப் பகுதிகள் அல்லது வரலாற்று நிகழ்வுகள் குறித்த தவறான கதையாடல்களை உருவாக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளது. இந்தியா விரைவில், சொந்தமாக சூப்பர் கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மட்டுமே இதற்கான நிரந்தரத் தீர்வாக அமையும் என்கின்றனர் வல்லுநர்கள்.

இதையும் படிக்க: உருவாகப்போகும் புதிய தேசம்.. நாலாபுறமும் நெருக்கடி.. PAK-க்கு சுத்துபோட்ட 4 பிரிவினர்!

Chinese model Kimi K3 adds pressure on India
முதலில் அரபிக்கடல்.. இப்போது விரிகுடா.. இந்தியாவைக் குறிவைக்கும் சீனா.. உதவி செய்யும் வங்கதேசம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com