\
China's New Master Plan to Take Taiwan Without War: A Strategic Move
china - taiwanReuters

தைவானை வளைக்க திட்டம்? போர் இல்லாமல் புதிய வியூகம்! சீனா போடும் மாஸ்டர் பிளான்!

தைவானைத் தனது நாட்டுடன் மீண்டும் இணைக்கும் முயற்சியில் சீனா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அப்படி தைவானைத் தன்னுடன் இணைக்க சீனா போடும் திட்டம் என்ன? இதன் பின்னணி என்ன? விரிவாகப் பார்க்கலாம்...
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார். ர

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே நீண்டகாலமாக அரசியல் மற்றும் ராணுவப் பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த 1949ஆம் ஆண்டு சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், அப்போதைய தேசியவாத அரசு தைவானுக்குச் சென்றது. அன்று முதல் தைவான் தனி அரசியல் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

taiwan
taiwanreuters

ஆனால், தைவான் தங்களது நாட்டின் ஒரு பகுதி என்றும், ஒருநாள் அதனை மீண்டும் சீனாவுடன் இணைக்க வேண்டும் என்றும் சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக ராணுவ நடவடிக்கைகளை மட்டும் நம்பாமல், பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியிலான ஒருங்கிணைப்பு முயற்சிகளையும் சீனா மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தைவானைச் சீனாவுடன் இணைக்கும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாகப் புதிய உத்திகளை அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

இதற்கிடையே, தைவானில் நேற்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சியான DPP, கடந்த 2022ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும்போது தனது வெற்றியை இரட்டிப்பாக்கி, 22 நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் 10 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேநேரத்தில், தலைநகர் தைபே உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் எதிர்க்கட்சியான குவோமிந்தாங் (KMT) கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, சீனாவின் தைவான் விவகார அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தைவானின் அரசியல் சூழல் எவ்வாறு மாறினாலும், இரு தரப்புக்கும் இடையிலான உறவுகளின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது என்றும், தாய்நாட்டின் மறுஒருங்கிணைப்பு தவிர்க்க முடியாதது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தைவான் சுதந்திரத்தை ஆதரிக்கும் சக்திகளுக்கு எதிராகத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

xi
xireueters

ஆனால், சீனாவின் இந்தக் கருத்துக்கு தைவான் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தைவான் மக்களின் ஜனநாயகத் தேர்வுகளுக்கு சீனா மதிப்பளிக்க வேண்டும் என்றும், எந்தவித முன்நிபந்தனைகளும் இன்றி தைவானின் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் சமமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும், தைவானின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை அந்நாட்டு மக்களுக்கு மட்டுமே இருப்பதாக அதிபர் லாய் சிங்-தே தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, தேர்தலுக்கு முன்னதாகவே தைவானைச் சுற்றியுள்ள வான்பரப்பிலும் கடல் பகுதியிலும் சீனாவின் ராணுவ விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்திருந்ததாகத் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

China's New Master Plan to Take Taiwan Without War: A Strategic Move
50,000 முன்னாள் வீரர்களை காணவில்லை: அதிர்ச்சி கொடுத்த பிரிட்டன் அரசு ! நடந்தது என்ன?