"எங்கள் உரிமைகளைப் பாதுகாக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம்" - ட்ரம்பின் 155 % வரிக்கு சீனா பதிலடி!
அமெரிக்கா தனது தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டும் இல்லையெனில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் உலக தலைவர்களை கவலையடைய செய்துள்ளது..சீனாவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதைப் பார்க்கலாம்...
உக்ரைன் மற்றும் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் டிரம்ப் கையிலெடுத்த ஆயுதம் தான் வரிவிதிப்பு.. இரு தரப்புக்குமான போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்பதால் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதலாக வரிவிதித்து அதிர்ச்சி கொடுத்தார்.. 15அதே சமயம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என எச்சரித்திருந்தார்.
குறிப்பாக, இந்தியாவுக்கு, 50 சதவீத வரி விதித்த டிரம்ப், சீனாவுக்கு, 155 சதவீத வரி விதிக்கப் போவதாக அறிவித்தார். பின்னர் இந்த முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அமெரிக்கா எப்போதும் சீனாவுடன் நட்புடன் இருப்பதையே விரும்புகிறது. ஆனால், வரி விதிப்பு விவகாரத்தில் சீனா எங்களிடம் கடுமையாக நடந்து கொண்டது. உலக நாடுகளை தன் பிடியில் வைத்திருக்க சீனா விரும்புகிறது. இதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என கூறினார். அதே சமயம், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் நவம்பர் 1-ம் தேதி முதல், 155 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து பேசிய சீன தூதர் வெய், "அமெரிக்க-சீனா வரிவிதிப்புப் போர் பிரச்னையில், சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. நாங்கள் எந்த மோதலையும் விரும்பவில்லை. ஆனால், கடுமையான சூழலுக்கு தள்ளப்பட்டால், நிச்சயமாக பதிலடி கொடுப்போம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்த விரும்பினால் சீனாவின் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன. பேச்சுவார்த்தைகள் தான் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் கூறுகிறோம். அமெரிக்கா தனது தவறுகளை சரிசெய்து கொண்டு பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் அப்படி செய்யாவிட்டால் சீனா தனது உரிமைகளைப் பாதுகாக்க என்ன வேண்டுமாலும் செய்யும் இது தான் எங்களின் நிலைப்பாடு என கூறியுள்ளார்.

