\
China Responds to Arunachal Border Intrusion Claims
Arunachal Pradesh IssueReuters

அருணாச்சலப் பிரதேச எல்லையில் ஊடுருவல்? விளக்கமளித்த சீனா!!

அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீன ஊடுருவல் அதிகரித்து வருவதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகிவரும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு சீன வெளியுறவுத்துறை விளக்கமளித்துள்ளது.
Published on

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஏற்கெனவே எல்லைப் பிரச்னையில் வாய்க்கால் தகராறு இருக்கும் நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தையும் அது உரிமை கொண்டாடி வருகிறது. இதற்காக முகாம் அமைப்பது, பெயர் சூட்டுவது போன்ற செயல்களில் சீனா ஈடுபட்டு வரும் நிலையில், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.

இந்தச்சூழலில் தான், ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகத்திடம் பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் குவோ ஜியாகுனிடம், இந்திய சமூக வலைதளங்களில் அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதியில் சீனாவின் ராணுவ நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்கள் குறித்தும், எல்லை மோதல் குறித்து இந்திய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவிக்காதது குறித்தும் கேள்வி எழுப்பட்டிருக்கிறது.

குவோ ஜியாகுன்
குவோ ஜியாகுன்cgtn.com

இதையடுத்து அதற்கு பதிலளித்துள்ள அவர், தற்போது இந்தியா - சீனா எல்லை நிலவரம் பொதுவாக அமைதியாக உள்ளதாகத் தெரிவித்த அவர், கடந்த வாரம் இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே எல்லை விவகாரங்கள் தொடர்பான கலந்தாலோதனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான பணிக்குழுவின் 36-வது கூட்டம் நடைபெற்றதாகக் குறிப்பிட்டார்.

மேலும், எல்லைப் பகுதிகளில் அமைதியையும் நிம்மதியையும் கூட்டாக நிலைநிறுத்தவும், ராஜ தந்திர மற்றும் ராணுவ வழிமுறைகள் மூலமாகத் தொடர்புகளைத் தொடரவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

China Responds to Arunachal Border Intrusion Claims
பலூசிஸ்தான் சுதந்திர தினம்.. பாகிஸ்தான் தாக்குதலில் 30 பேர் பலி.. உச்சத்தை எட்டிய மோதல்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com