சீனா
சீனாமுகநூல்

’எங்களின் காதல் உலகத்தைவிட பெரியது' மனைவின் சாம்பலால் செய்யப்பட்ட பானை; சீன நபரின் வியத்தகு செயல்!

கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் 62 வயதான பியாவோ ஷுடாங். இவரது மனைவி லாங் ஐகுன். இவர்கள் இருவரும் 30 ஆண்டுகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர்.
Published on

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மனைவியின் விருப்பதை நிறைவேற்றுவதற்காக, அவரின் சாம்பலை களிமண்ணுடன் கலந்து பானை ஒன்றை வடிவமைத்துள்ளார். சீனாவை சேர்ந்த முதியவர் ஒருவர்.

கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் 62 வயதான பியாவோ ஷுடாங். இவரது மனைவி லாங் ஐகுன். இவர்கள் இருவரும் 30 ஆண்டுகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

இருவரும் இணைந்து ஒன்றாக மண்பாண்டம் செய்வது, பண்டையை சீன இசைக்கருவிகளை ஆராய்ச்சி செய்வதற்காக பயணங்கள் மேற்கொள்வது என்று மகிழ்ச்சியாக வாழ்நாட்களை ஒன்றாக கழித்துள்ளனர்.

இப்படி சந்தோஷமாக சென்றுகொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில், ஒருநாள் விழுந்தது பேரிடி. பியாவோவி மனைவியான லாங்கிற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால், அதிர்ச்சியடைந்த இருவரும், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளனர். பிறகு லாங்கிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. எப்படியும் ஒருநாள் தனது உடல்நிலை மோசமடையும் அதற்கும் தன்னுடைய விருப்பதை தனது கணவரிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துள்ளார்..

இதன்படி, தான் இறந்த பிறகு தனது உடமைகளை பானைக்குள் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்று மனைவி விருப்பம் தெரிவித்துள்ளார்.

நாட்களும் கடந்தன... இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட லாங்கின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..

தனது மனைவி உயிரிழந்தாலும், ’எங்களின் காதல் இந்த உலகத்தைவிட பெரியது. அது என்றும் அழியாது’ என்பதை சுட்டிக்காட்டுவகையில், பியோ, தனது மனைவியின் இறுதி ஆசையையும் நிறைவேற்றினார்.

இதன்படி,. மனைவியின் சாம்பலை களிமண்ணுடன் கலந்து பானை ஒன்றையும் செய்துள்ளார். இதுகுறித்து பதிவிட்ட பியோ, தனது மனைவியின் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாகவும், இதன்மூலம் இருவரும் இறந்த பிறகு சொர்க்கத்தில் ஒன்றாக வாழ்வோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சீனா
அமெரிக்கா | வலுக்கும் குரல்கள்.. எலான் மஸ்க்கிற்கு எதிராக இடைக்காலத் தடை நீடிப்பு!

மேலும், ”நான் இதுவரை செய்த மண்பாடங்களிலேயே இதுதான் சிறந்த மண்பாண்டம்.. நீங்கள் என்ன நினைக்கீறீர்கள்?.. “ என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் பியோ.

இதுகுறித்தான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இதற்கு கருத்து தெரிவிக்கும் பயனர்கள்,"இன்றைய உலகில் உண்மையான காதல் இன்னும் இருப்பதைக் கண்டால்,சிறுது பொறாமையாகவும் மிகுந்த நெகிழ்ச்சியும் அடைகிறோம். " என்று தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com