\
China Overtakes the US in Latest Global Study
Trump and Xi web

அதிகம் விரும்பப்படும் நாடு.. அமெரிக்காவை முந்திய சீனா - புதிய ஆய்வில் தகவல்!

36 நாடுகளில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின்படி, குடிமக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பொறுத்தவரை அமெரிக்கா முன்னிலையில் இருந்தாலும், பெரும்பாலான நாடுகளில் அமெரிக்காவை விட செல்வாக்கில் சீனாவை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
Published on

அமெரிக்காவைவிட சீனாவை உலக நாடுகள் அதிகம் விரும்புவதாகப் பியூ (Pew) ஆராய்ச்சி மையத்தின் புதிய சர்வதேசக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. ட்ரம்ப் நிர்வாகத்தின் போர் நடவடிக்கைகள் மற்றும் உலக நாடுகளுடனான மோதல் போக்கே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஆய்வு நடத்தப்பட்ட 36 நாடுகளில் கனடா, மெக்சிகோ உள்ளிட்ட 25 நாடுகள் அமெரிக்காவைவிட சீனாவையே ஆதரிக்கின்றன. இந்த ஆய்வின் 20 ஆண்டு வரலாற்றில் அமெரிக்காவை சீனா முந்துவது இதுவே முதல்முறையாகும். இந்தியா, இஸ்ரேல் உள்ளிட்ட 6 நாடுகளில் மட்டுமே அமெரிக்கா இன்னும் செல்வாக்குடன் உள்ளது.

சீனா குறித்த உலகளாவிய கண்ணோட்டத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றமே இதில் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். ஒரு காலத்தில் சீனா மீதான பொதுமக்களின் கருத்து மிகவும் எதிர்மறையாக இருந்தது; ஆனால், இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 36 நாடுகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்ட நாடுகளில், தற்போது சீனாவின் மீது சாதகமான மனப்பான்மை அதிகரித்துள்ளது.

Xi & Trump
Xi & Trump web

இத்தகைய மாற்றத்தை இத்தாலியில் மிகத் தெளிவாகக் காண முடிகிறது; அங்கு சீனா மீதான சாதகமான கண்ணோட்டம் 2022-ல் 31 சதவீதமாக இருந்த நிலையில், 2026-ல் அது 51 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏறக்குறைய இருபது ஆண்டுகளில் முதல் முறையாக, இத்தாலியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இப்போது சீனாவைச் சாதகமான கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர்.

சீனா மீதான நேர்மறையான கண்ணோட்டம் அதிகரித்துள்ள மற்றொரு நாடு ஸ்பெயின் ஆகும்; அங்கு 54 சதவீத மக்கள் சீனாவை விரும்புகிறார்கள். 2011-க்குப் பிறகு இத்தகைய நிலை அங்கு காணப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இருப்பினும், அனைத்து நாடுகளிலும் இப்போக்கு காணப்படவில்லை; சில நாடுகளில் சீனா மீதான சாதகமான கண்ணோட்டத்தில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலில் கடந்த ஆண்டில் 33 சதவீதமாக இருந்த சீனாவுக்கு சாதகமான கண்ணோட்டம், இந்த ஆண்டில் வெறும் 19 சதவீதமாகக் குறைந்துள்ளது.

Xi & Netanyahu
Xi & Netanyahuweb

அதேவேளையில், சீனாவுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா வெறும் ஆறு நாடுகளில் மட்டுமே மக்கள் செல்வாக்கில் முன்னிலையில் உள்ளது. அந்த ஆறு நாடுகளில் நான்கு நாடுகள் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்தவை; அவை போலந்து, இந்தியா, இஸ்ரேல், ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் தென் கொரியா ஆகியனவாகும்.

China Overtakes the US in Latest Global Study
விரிவடையும் மோதல்.. நெதன்யாகுவை விளாசிய அமெரிக்கா.. அதிர்ச்சிப் பின்னணி?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com