10ஜி சேவைpt
உலகம்
10ஜி சேவையை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்த சீனா!
பிராட்பேண்ட் வலைதளத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளதாக அஸெர்நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் 5ஜி சேவையை நாடு முழுவதும் செயல்படுத்துவதில் டெலிகாம் நிறுவனங்கள் முட்டிமோதும் நேரத்தில், சீனாவில் வரலாற்றில் முதல்முறையாக 10ஜி சேவை மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
சீனாவின் முன்னணி டெக் நிறுவனமான ஹூவாய் மற்றும் டெலிகாம் சேவை நிறுவனமான யூனிகாம் ஆகியவை இணைந்து ஹெபே மாகாணத்தின் சுனான் பகுதியில் 10 ஜிகாபைட்ஸ் பிராட்பேண்ட் வலைதளத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளதாக அஸெர்நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.