canada report on khalistani terrorist hardeep nijjar murder
ஹர்தீப் சிங் நிஜ்ஜார், ட்ரூடோ, மோடிஎக்ஸ் தளம்

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரம் | கனடா வெளியிட்ட அறிக்கை.. பொய்யானது குற்றச்சாட்டு!

நிஜ்ஜார் கொலையில் வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Published on

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்தாண்டு சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் இந்தியா - கனடா உறவில் மேலும் விரிசல்களை ஏற்படுத்தி வருகிறது. இதில் கனடாவிலிருந்து இந்திய தூதரை திரும்பப்பெற்ற மத்திய அரசு, டெல்லியிலுள்ள கனடா தூதரை வெளியேறவும் உத்தரவிட்டது.

நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்திய தூதர்களை நேரடியாக குறைகூறும் வகையில் கனடா பிரதமர் ட்ரூடோ பேசியது மேலும் சிக்கலை அதிகரித்தது. தங்கள் மண்ணில் இந்திய அரசு காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக வன்முறைகளை நிகழ்த்தி வருவதாகவும், இதற்கு பிஷ்னோய் கூலிப்படையை பயன்படுத்திக்கொள்ள முயன்றதாகவும் கனடா அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் கனடா மண்ணில் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அந்நாட்டு அதிகாரிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இந்தியா முற்றாக நிராகரித்தது.

canada report on khalistani terrorist hardeep nijjar murder
ஹர்தீப் சிங் நிஜ்ஜார்எக்ஸ் தளம்

இந்த நிலையில், நிஜ்ஜார் கொலை மற்றும் கனடா தேர்தல்களில் வெளிநாடுகளின் தலையீடுகள் தொடர்பாக விசாரிக்கக் கனடா அரசு ஆணையம் ஒன்றை அமைத்தது. அந்த ஆணையம் விசாரணை நடத்தி தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

அதில், பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், நிஜ்ஜார் கொலையில் வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்று கனடா நாட்டு ஆணையமே உறுதிப்படுத்தி இருக்கிறது.

canada report on khalistani terrorist hardeep nijjar murder
கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தலைவர்! யார் இந்த ஹர்தீப்சிங் நிஜ்ஜார்? உலக நாடுகள் என்ன சொல்கிறது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com