பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று!

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. வழக்கத்திற்கு மாறாக இம்முறை இந்திய வம்சாவளியினர் அதிகளவில் போட்டியிடுகின்றனர்.
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல்
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல்முகநூல்

650 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில், 14 ஆண்டுகளாக பிரிட்டனை வழிநடத்தும் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

பிரிட்டன்
பிரிட்டன் முகநூல்

எனினும் தொழிலாளர் கட்சிக்கே அதிகளவில் மக்கள் ஆதரவு இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. சுமார் 10 லட்சம் பேர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடக்கூடுமென கூறப்படுகிறது.

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல்
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள்!

கடந்த முறை பிரிட்டன் தமிழர்கள் என இந்திய வம்சாவளியினர் 15 பேர் எம்.பி. க்களாக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில், இம்முறை இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com