பிரேசில்: கொழுப்பை அகற்ற ஆபரேஷன்.. 4 முறை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த பிரபல பிட்னஸ் பெண்!

பிரேசிலில், காலில் உள்ள கொழுப்பை அகற்றும் அறுவைசிகிச்சையின்போது 4 முறை மாரடைப்பு ஏற்பட்டு இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
லுவானா ஆன்ட்ரே
லுவானா ஆன்ட்ரேட்விட்டர்

சமூக வலைதளங்களில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக வீடியோக்களை வெளியிடுவோர் இன்று அதிகளவில் உள்ளனர். அந்த வகையில் பிட்னஸ் ஆர்வலரான பிரேசிலைச் சேர்ந்த 29 வயதான லுவானா ஆன்ட்ரே ஒருவர். தன்னுடைய அழகிற்காக உடற்பயிற்சி மற்றும் உணவிலும் தீவிர கவனம் செலுத்தினார். இன்ஸ்டாகிராமில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் இவரை பின்தொடருகின்றனர். தன்னுடைய பிட்னஸுக்காக இவர் அறுவைச்சிகிச்சைகளையும் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

லுவானா ஆன்ட்ரே
லுவானா ஆன்ட்ரேட்விட்டர்

இந்த நிலையில், தனது முழங்காலில் உள்ள கொழுப்பை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதாவது, ’லிப்போசக்‌ஷன்’ எனப்படும் கொழுப்பு நீக்க அறுவைசிகிச்சையை மேற்கொண்டார். இதற்காக பிரேசிலின் பிரபல தனியார் மருத்துவமனையில் லுவானா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுமார் இரண்டரை மணி நேரம் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவைசிகிச்சை முடிந்த பிறகும் அவர் சுயநினைவுக்கு திரும்பாத நிலையில் ஐசியூவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சையின்போது அவருக்கு, 4 முறை மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதில், சிகிச்சை பலனின்றி லுவானா ஆன்ட்ரே உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவருடைய இறப்பை, தாங்கிங்கொள்ள முடியாத பயனர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: அன்று அமெரிக்கா செய்த தவறுதான்.. இன்று பாகிஸ்தானில் குண்டு வெடிக்கிறது - பிரதமரின் பேச்சும் வரலாறும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com