பிரேசில்: 2 முறை மாரடைப்பு.. ஃபிட்னஸ்க்காக இன்ஸ்டாவில் பிரபலமான இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

பிரேசிலில், இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி ஃபிட்னஸ் பெண் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Larissa Borges
Larissa Borgesinsta

சமூக வலைதளங்களில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக வீடியோக்களை வெளியிடுவோரில் லரிஸா போர்கேஸும் (Larissa Borges) ஒருவர். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவர், ஃபிட்னஸ், ஃபேஷன், உள்ளிட்ட தகவல்களைத் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, பெண் இன்புளூயன்சராக திகழ்ந்ததுடன், பல ஃபாலோயர்ஸ்களையும் கொண்டிருந்தார்.

Larissa Borges
Larissa Borgesinsta

இந்த நிலையில், அவருக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சிகிச்சை பலனின்றி தன்னுடைய 33 ஆவது வயதில் மரணம் அடைந்திருப்பது அவரது ஃபாலோயர்ஸ்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அவருடைய மரணம் குறித்த செய்தியை அவரது குடும்பத்தினர் லரிசாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

அதில், "33 வயது நிரம்பிய, மிகவும் அன்பான ஒருவரை இழந்தது வலி மிகுந்த தருணம். எங்கள் இதயங்கள் உடைந்துவிட்டன. அவர் இல்லாத எங்களின் ஏக்கம் விவரிக்க முடியாதது" எனப் பதிவிட்டுள்ளனர். கிராமடோ செல்லும்போது மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 20ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Larissa Borges
Larissa Borgesinsta

அப்போது அவர் கோமா நிலைக்குச் சென்றார். ஒரு வாரம் கோமா நிலையில் இருந்த அவருக்கு 2வது (ஆகஸ்ட் 28) மாரடைப்பு ஏற்பட்டது. அதற்குப் பிறகு அவர் உயிர் பிழைக்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரது குடும்பத்தினர் வெளியிட்டிருக்கும் பதிவில், ”அவர், வசீகரிக்கும் புன்னகைக்காக உலகம் முழுவதும் அறியப்பட்டார். எப்போதும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு புன்னகையைத் தந்தார். அவருடைய ஆளுமை எந்தச் சூழலையும் ஒளிரச் செய்தது. அவர் ஒரு கடின உழைப்பாளி. அவர், போர்வீரனைப் போல் ஓர் உறுதியுடன் பெண் செய்யும் அனைத்துத் தடைகளையும் எதிர்கொண்டு தனது வாழ்க்கைக்காக அயராது போராடினார்” எனப் பதிவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com