வினேஷ் போகட், அருணா ராய்,  பூஜா சர்மா
வினேஷ் போகட், அருணா ராய், பூஜா சர்மாpt web

100 சிறந்த பெண் ஆளுமைகள்.. BBC பட்டியலில் இடம்பிடித்த 3 இந்தியப் பெண்கள்! வினேஷ் போகட்-க்கு இடம்!

2024 ஆம் ஆண்டிற்கான 100 ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்குமிக்க பெண்களின் பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது.
Published on

2024 ஆம் ஆண்டிற்கான 100 ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்குமிக்க பெண்களின் பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கடந்த 2018 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்ற ஈராக்கின் நாடியா முராட் உள்ளிட்ட உலக ஆளுமைகள் பலரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த 100 சிறந்த ஆளுமைகளின் பட்டியலில், 3 இந்தியப் பெண்மணிகள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் முறையே தேசமே கொண்டாடிய வினேஷ் போகட், 4000 ஆதரவற்றோர் சடலங்களுக்கு இறுதிக்காரியம் செய்த பூஜா ஷர்மா, தகவல் அறியும் உரிமைச் சட்டம் வரக் காரணமாக இருந்த அருணா ராய் போன்றோர்

வினேஷ் போகட்

வினேஷ் போகத்
வினேஷ் போகத்எக்ஸ் தளம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் சர்ச்சைக்குரிய வகையில் பதக்கத்தை இழந்தாலும், உலகமெங்கும் சிறந்த 100 பெண்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார் வினேஷ் போகட். மூன்று முறை ஒலிம்பிக் களம் கண்ட சாதனையாளரான வினேஷ் போகட் தேசம் முழுவதும் போற்றப்படும் வீராங்கனையாக இருக்கிறார். உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆசியப் போட்டிகளில் சாதித்து காட்டியிருக்கிறார். மல்யுத்த விளையாட்டில் ஆடவர் ஆதிக்கத்தை தகர்த்த மாமணியாக அவர் உள்ளார்.

வினேஷ் போகட், அருணா ராய்,  பூஜா சர்மா
மீண்டும் தொடங்கிய சிரியா யுத்தம்| ஓங்கும் கிளர்ச்சிப் படைகளின் கை.. என்ட்ரி கொடுத்த ரஷ்யா, ஈரான்!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய போதும், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாகக் கூறி, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து இந்த தேசமே அவருக்காக கண்ணீர் வடித்தது. பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை மரியாதையும் அரசு தரப்பிலிருந்தும் பொதுமக்களிடம் இருந்தும் அவருக்கு கிடைத்தன. அதே வேளையில் இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் மீதான பாலியல் விவகாரத்தையும் அவர் கைவிடவில்லை. ஒலிம்பிக் முடிந்த பின்னும் அவரது போர்க்குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அதுவே அவர் அரசியல் களம்புக காரணமாக அமைந்தது.

பூஜா ஷர்மா

பூஜா ஷர்மா
பூஜா ஷர்மா

பிபிசி 100 சிறந்த ஆளுமைகளில் இடம்பெற்றிருக்கும் இந்தியாவை சேர்ந்த மற்றொரு நபர் டெல்லியை சேர்ந்த பூஜா ஷர்மா. ஆதரவற்றோரின் சடலங்களை அவரவர் மத சம்பிரதாயத்துக்கு உட்பட்டு இறுதிச்சடங்குகளை சிறப்புற செய்பவர் இவர். தமது சகோதரரின் இறுதிச்சடங்கினை தாம் ஒருவராக நின்று செய்த அனுபவம் அவருக்கு உண்டு. அந்த வலிதான் இத்தகைய சேவையின் பக்கம் அவரது வாழ்க்கையை திருப்பிவிட்டது. ப்ரைட் தி சோல் (Bright the soul) என்ற சேவை அமைப்பை நிறுவி, அதன் மூலம் நற்காரியங்களை செய்து வருகிறார் பூஜா ஷர்மா. கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் பேருக்கு இறுதிக்காரியங்களை செய்திருக்கிறார் பூஜா ஷர்மா.

வினேஷ் போகட், அருணா ராய்,  பூஜா சர்மா
Asia Cup| தோனியை போல No Look ரன் அவுட்.. அசத்திய ஹர்வன்ஷ் சிங்.. அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!

அருணா ராய்

அருணா ராய்
அருணா ராய்

சென்னையைச் சேர்ந்த சமூக சேவகர் அருணா ராய்-யும் இந்தப்பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். 78 வயதாகும் அருணா ராய் கடந்த 40 ஆண்டுகளாக கிராம மக்களின் முன்னேற்றத்துக்காக முழு அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றி வருகிறார். மக்களிடம் வெளிப்படைத்தன்மையுடன் அரசு நடந்துகொள்ள வேண்டும், நியாயமான ஊதியம் வழங்கப்பட வேண்டும், அரசிடம் சரியான தரவுகள் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட மையக் கொள்கையுடன் சமூக சேவையாற்றி வருகிறார் அருணா ராய். தேசிய மகளிர் கூட்டமைப்பின் தலைவரான அருணா ராய் வலியுறுத்தலின் காரணமாகவே தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

வினேஷ் போகட், அருணா ராய்,  பூஜா சர்மா
இந்திரா காந்திக்கு எதிரான குற்றச்சாட்டு; BJP எம்பி பேச்சுக்கு எதிராக கொந்தளித்த ஆ.ராசா! நடந்ததுஎன்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com