Former US President Obama
Former US President Obama web

'ஏலியன்கள் இருப்பது உண்மைதான்..' - அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா!

யூடியூபர் பிரையன் டைலர் கோவன் (Brian Tyler Cohen) உடனான ஒரு நேர்காணலின் போது, ​​வேற்றுகிரகவாசிகள் (ஏலியன்கள்) இருப்பது குறித்த கேள்விக்கு ஒபாமா பதிலளித்து பேசியிருந்தார் .
Published on
Summary

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஏலியன்கள் இருப்பது உண்மைதான் என கூறியுள்ளார். ஆனால், அவர்களை சந்தித்ததில்லை என்றும், ஏலியன்களை மறைத்து வைக்குமளவுக்கு நிலத்துக்கு கீழ் வசதியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுகிரகவாசிகளை சந்தித்தது இல்லை, ஆனால் ஏலியன்கள் இருப்பது உண்மைதான் என்றும், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது தனக்குத் தெரியாது என்றும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார்.

மேலும் ரகசிய அமெரிக்க விமானப்படை தளமிருக்கும் நெவாடாவில் ஏரியா 51 பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.

Extraterrestrial Highway in Nevada
Extraterrestrial Highway in Nevadaweb

ஏலியன்களை மறைத்து வைக்குமளவுக்கு நிலத்துக்கு கீழ் வசதியில்லை, மிகப்பெரிய சதி செய்து அமெரிக்க ஜனாதிபதிக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்று பேசியுள்ளார்.

Former US President Obama
”8 போர்களை சுலபமாக நிறுத்தியுள்ளேன்., ரஷ்யா - உக்ரைன் மோதல் கடினமாக உள்ளது” - டிரம்ப்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com