அதானி, ஷேக் ஹசினா, முகமது யூனுஸ்
அதானி, ஷேக் ஹசினா, முகமது யூனுஸ்எக்ஸ் தளம்

அதானி குழுமத்துடன் ஒப்பந்தம்| மறு ஆய்வு செய்ய இடைக்கால அரசு முடிவு.. வங்கதேசம் அதிரடி

அதானி குழுமம் உடனான ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்ய வங்கதேச இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது.
Published on

இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, ரூ.2,239 கோடி ($265 மில்லியன்) பிரபல தொழிலதிபருமான கவுதம் அதானி லஞ்சம் கொடுக்க முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. முறைகேடாகப் பெறப்பட்டதாக கூறப்படும் இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து, கடன் மற்றும் பத்திரங்கள் மூலம், அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் திரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதானியின் இந்தச் செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டப்படி தவறானது எனக்கூறி நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கவுதம் அதானி தவிர அவர் உறவினர் சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் பெயரும் இடம் பெற்றுள்ளது.

கௌதம் அதானி
கௌதம் அதானிweb

இதே புகாரில் அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையமும் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அதேநேரத்தில், இந்தக் குற்றச்சாட்டுக்கு அதானி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. எனினும், இந்த குற்றச்சாட்டு காரணமாக, பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்தன. தொடர்ந்து இந்திய அரசியலிலும் அதானி புயல் வீசத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரம் இன்று, நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் எதிரொலித்தது. மேலும், அதானி குழுமத்துடனான எரிசக்தி துறை ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடியாக அறிவித்திருந்தார். இதனால் அதானிக்கு அடி மேல் அடி விழுந்து வருகிறது.

அதானி, ஷேக் ஹசினா, முகமது யூனுஸ்
2 நாட்களில் ஒரு லட்சம் கோடி சரிவு.. உலக பணக்காரர்கள் பட்டியலில் 25வது இடம் சென்ற அதானி!

இந்த நிலையில், அதானி குழுமம் உடனான ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்ய வங்கதேச இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு, அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் செய்த மின்சக்தி ஒப்பந்தங்கள் சர்வதேச சட்ட விதிகளுக்கு மாறாக செய்யப்பட்டுள்ளன என வங்கதேச இடைக்கால அரசு அமைத்த விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து, அடுத்தகட்ட விசாரணையை நடத்த, சா்வதேச சட்டம் மற்றும் புலனாய்வு அமைப்பைச் சோ்ந்த அதிகாரிகளை குழுவில் பணியமா்த்த வங்கதேசம் முடிவு செய்துள்ளது.

முன்னதாக, மின்சாரம் மற்றும் எரிசக்தி வழங்கல் சட்டத்தின் கீழ் மின்சக்தி ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி மொயீனுல் இஸ்லாம் சௌதரி தலைமையில் ஒரு குழுவை அண்மையில் அமைத்தது. இந்த குழு, கடந்த 2009 முதல் 2024-ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய மின் உற்பத்தி ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்தது. அதில், வங்கதேசத்தைச் சோ்ந்த நிறுவனங்கள் அனைத்தும், முந்தைய அரசாங்கத்துடன் நெருங்கிய தொடா்பை கொண்டுள்ளவை என்பது கண்டறியப்பட்டது. அந்த வகையிலேயே வங்கதேச அரசு, அடுத்தகட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. குறிப்பாக, பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியது அரசையே கலங்கடித்தது.

இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்றார்.

அதானி, ஷேக் ஹசினா, முகமது யூனுஸ்
அதானி மீது குற்றச்சாட்டு| ஆந்திர அரசியலில் வெடித்த புயல்.. ஜெகனுக்கு செக் வைக்கும் சந்திரபாபு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com