\
Three hurricanes form in the Pacific Ocean because of El Nino
CycloneReuters

அடுத்தடுத்து தாக்கும் சக்திவாய்ந்த புயல்கள்! எல் நினோ தான் காரணமா? இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

அடுத்தடுத்து உருவாகும் புயல்களால் இந்தியாவுக்கும் பாதிப்பு ஏற்படுமா? இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? பார்க்கலாம்.
Published on: 
Summary

எல் நினோ தாக்கத்தால் பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை அதிகரித்து, கிழக்கு ஆசிய நாடுகளில் சக்திவாய்ந்த புயல்கள் உருவாகி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்தியாவிலும் மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

கிழக்கு ஆசிய நாடுகளை அடுத்தடுத்து தாக்கி வரும் சக்திவாய்ந்த புயல்களால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன... குறிப்பாக, எல் நினோ தாக்கத்தால் பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்திருப்பதே இந்தப் புயல்களின் தீவிரத்திற்குக் காரணம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அப்படியானால், அடுத்தடுத்து உருவாகும் இந்தப் புயல்களால் இந்தியாவுக்கும் பாதிப்பு ஏற்படுமா? இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? பார்க்கலாம்.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் பருவநிலை மாற்றம் காரணமாக வானிலையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பிலிப்பைன்ஸ், தைவான், சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து உருவாகும் சக்திவாய்ந்த புயல்களை எதிர்கொண்டு வருகின்றன. இந்தப் புயல்களால் உயிரிழப்புகள், விமானப் போக்குவரத்து பாதிப்பு, விவசாய நிலங்கள் சேதம் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

Super El Nino Brewing Threaten the World
super el nino AI generated image

இந்தப் புயல்கள் அடுத்தடுத்து உருவாவதற்கு முக்கியக் காரணமாக எல் நினோ விளைவு சுட்டிக்காட்டப்படுகிறது. பொதுவாக, எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் நீரின் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரிக்கும் இயற்கையான வானிலை நிகழ்வாகும். இதனால் கடல் மற்றும் வளிமண்டலத்தின் காற்று சுழற்சியில் மாற்றங்கள் ஏற்பட்டு, உலகின் பல்வேறு பகுதிகளிலும் வானிலை பாதிக்கப்படலாம்.

தற்போது ஏற்பட்டுள்ள எல் நினோ தாக்கம் விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக,பசிபிக் பெருங்கடலின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அக்டோபர் மாதத்தில் வழக்கத்தைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாகப் பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 1949ஆம் ஆண்டு முதல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து இதுவே அதிகபட்ச வெப்பநிலையாகும். இதற்கு முன்பு 1997ஆம் ஆண்டு டிசம்பரில் 3.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதே அதிகபட்சமாக இருந்தது.

எல் நினோ தாக்கத்தால் பசிபிக் பெருங்கடலில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கை மட்டுமல்லாமல், அவற்றின் தீவிரமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. வழக்கமாக உருவாகும் இடங்களைவிட கிழக்குப் பகுதிகளில் புயல்கள் உருவாகி, அதிக வெப்பமுள்ள கடல் பகுதியில் நீண்ட தூரம் பயணிப்பதால் அவை மேலும் வலிமையடைய வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாக, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியப் பகுதிகளில் இந்த ஆண்டுக்கான புயல்களின் ஒட்டுமொத்த தீவிரத்தைக் குறிக்கும் ACE குறியீடு, கடந்த 30 ஆண்டுகளின் சராசரியைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Three hurricanes form in the Pacific Ocean because of El Nino
CycloneReuters

NASA வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் இறுதி வரை வடமேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் மட்டும் 25 பெயரிடப்பட்ட புயல்கள் உருவாகியுள்ளன. இதனால், இந்த ஆண்டு பசிபிக் பெருங்கடல் பகுதியில் புயல் செயல்பாடுகள் வழக்கத்தைவிட அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது

இவ்வாறு, பசிபிக் பெருங்கடலில் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் வலுவடைந்து வரும் எல் நினோ தாக்கத்தால் கிழக்கு ஆசிய நாடுகள் அடுத்தடுத்து சக்திவாய்ந்த புயல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தியாவிலும் மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Three hurricanes form in the Pacific Ocean because of El Nino
தீபாவளி நாட்களில் ட்விஸ்ட்! தமிழகத்தை குறிவைக்கும் கனமழை? வானிலை மையம் Warning!