Helicopter Accidentpt desk
உலகம்
ஆஸ்திரேலியா: சொகுசு விடுதியின் மேற்கூரையில் சொருகிய ஹெலிகாப்டர்
ஆஸ்திரேலியாவில் ஹெலிகாப்டர் ஒன்று சொகுசு விடுதியின் மீது விழுந்த விபத்தில் விமானி உயிரிழந்தார்.
தெற்கு ஆஸ்திரேலியாவின் கெய்ரின்ஸ் நகரில் வானில் பறந்து கொண்டிருந்த சுற்றுலா ஹெலிகாப்டர்களில் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து பிரபல சொகுசு விடுதியின் மேற்கூரையின் மீது விழுந்து நொருங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த விமானி உயிரிழந்தார். விபத்தை தொடர்ந்து நெருப்புடன் கரும்புகைகள் எழுந்ததால், சொகுசு விடுதியில் தங்கியிருந்தவர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
Helicopter Accidentpt desk
இதனிடையே மற்றொரு விமானம் பாதுகாப்பு கருதி விடுதியின் மேல்தளத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. வானில் பறந்த ஹெலிகாப்டர்களின் இறக்கைகள் ஒன்றோடு ஒன்று மோதியதால், நிலைத் தடுமாறி ஒரு ஹெலிகாப்டர் விழுந்ததாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.