\
 பையஸ் ஹமீது
பையஸ் ஹமீதுமுகநூல்

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் முன்னாள் தலைவர் அதிரடி கைது

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் முன்னாள் தலைவர் லெப்டினட் ஜென்ரல் பையஸ் ஹமீதை கைது செய்திருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
Published on

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் முன்னாள் தலைவர் லெப்டினட் ஜென்ரல் பையஸ் ஹமீதை கைது செய்திருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. குடியிருப்பு திட்டம் ஊழல் தொடர்பாக அவருக்கு எதிராக ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பையஸ் ஹமீது தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தம்மிடம் 4 கோடி ரூபாய்வரை பறித்ததாக டாப் சிட்டி குடியிருப்பு திட்டத்தின் தலைவர் மொயிஸ் அகமது கான் கடந்த 2023ஆம் ஆண்டில் குற்றம்சாட்டியிருந்தார்.

 பையஸ் ஹமீது
வங்கதேசம் | ‘நாங்க விடமாட்டோம்...’ காளி கோயிலைக் காக்கப் போராடும் இஸ்லாமிய இளைஞர்கள்!

இது தொடர்பாக விசாரணை நடத்திய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து விரிவான விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான் ராணுவம், பாகிஸ்தான் ராணுவ சட்டத்தின்படி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com