ஐநா விவாதம்
ஐநா விவாதம் file image

’மதத்தை அரசியல் கருவியாக பயன்படுத்தக் கூடாது..’ - ஐநாவில் இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி!

தனது நாட்டில் உள்ள சிறுபான்மையினரைப் பாதுகாக்கத் தவறிய பாகிஸ்தான், மற்ற நாடுகளை விமர்சிக்கத் தகுதியற்றது என்றும், பயங்கரவாதத்தை மறைக்கவே இதுபோன்ற நாடகங்களை ஆடுவதாக இஸ்லாமிய வெறுப்பு குறித்த விவாதத்தின்போது போது இந்தியப் பிரதிநிதி கூறியுள்ளார்.
Published on
Summary

ஐக்கிய நாடுகள் பொது சபையில் இஸ்லாமிய வெறுப்பு குறித்த விவாதத்தின்போது போது, இந்தியா குறித்து பாகிஸ்தான் முன்வைத்த விமர்சனங்களுக்கு இந்தியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. மதத்தை அரசியல் லாபத்திற்காக ஒரு கருவியாகப் பயன்படுத்தக் கூடாது என இந்தியப் பிரதிநிதி கூறினார். இந்து, சீக்கிய, பௌத்த மதங்களுக்கு எதிரான வெறுப்புணர்வுகளையும் ஐநா கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது.

ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்லாமோஃபோபியா குறித்த தீர்மானத்தின் போது, இந்தியாவைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. "மதத்தை அரசியல் லாபத்திற்காக ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது" என்று இந்தியா பாகிஸ்தானைக் கடுமையாகச் சாடியுள்ளது.

indian repesentative at the UN
indian repesentative at the UN X

பாகிஸ்தான் வேண்டுமென்றே ஆதாரமற்ற கதைகளை உருவாக்கி இந்தியாவைப் பற்றி தவறான பிம்பத்தை உலக அரங்கில் கட்டமைக்க முயல்வதாக இந்தியா குற்றம் சாட்டியது. ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான வெறுப்பை மட்டும் முன்னிலைப்படுத்துவதை விடுத்து, இந்து மதம், சீக்கிய மதம், பௌத்தம் மற்றும் இதர சிறுபான்மை மதங்களுக்கு எதிராக உலகம் முழுவதும் நிலவும் வெறுப்புணர்வுகளையும் ஐநா அங்கீகரிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐநா விவாதம்
எங்க அடிச்சா வலிக்கும்? அமெரிக்காவின் ரகசியம் தெரிந்த ஈரான்.. தாக்குதலுக்கு இரையாகும் UAE!

தனது நாட்டில் உள்ள சிறுபான்மையினரை (இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள்) பாதுகாக்கத் தவறிய ஒரு நாடு, மற்ற நாடுகளைப் பற்றிப் பேச தகுதியற்றது என்றும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் தனது போக்கை மறைக்க இதுபோன்ற நாடகங்களை ஆடுவதாகவும் இந்தியப் பிரதிநிதி தெரிவித்தார். வெறுப்புணர்வு என்பது ஒரு மதத்திற்கு மட்டுமே உரியது அல்ல. அனைத்து மதங்களுக்கு எதிரான பாகுபாடுகளையும் ஒழிக்க ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை தேவை என இந்தியா இக்கூட்டத்தில் பேசியது.

பாகிஸ்தான் - இந்தியா
பாகிஸ்தான் - இந்தியாஎக்ஸ் தளம்

ஐநா சபையில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமோஃபோபியாவிற்கு எதிரான சர்வதேச தினத்தைக் கடைபிடிக்கும் தீர்மானம் விவாதிக்கப்படும் போது, பாகிஸ்தான் இந்தியாவை விமர்சிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அதற்குப் பதிலாக இந்தியா தனது 'பதில் அளிக்கும் உரிமை' மூலம் இந்த முறை வலுவான ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com