\
Another attack by the Houthi in saudi arabia
Another attack by the Houthi in saudi arabiaReuters

அடுத்தடுத்து அடி வாங்கும் சவூதி: இந்தியாவுக்கு தலைவலியாகும் ஹவுதி.. உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!

ஹவுதி அமைப்பின் மற்றொரு தாக்குதல் காரணமாக இந்தியாவுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Published on: 
Summary

ஹவுதி அமைப்பின் தாக்குதலால் சவூதி அரேபியாவின் எண்ணெய் தளங்கள் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை 3.5% உயர்ந்துள்ளது. இந்த உயர்வு இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், OPEC பிளஸ் கூட்டத்தில் தீர்வு எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமனில் 2014-2015 காலகட்டத்தில் அரசுக்கு எதிராகக் களமிறங்கிய ஹவுதி அமைப்பு ஏமனின் தலைநகரான சனா (Sanaa) உள்ளிட்ட பெரும்பாலான வடக்குப் பகுதிகளைக் கைப்பற்றியது. இந்த ஹவுதி அமைப்பிற்கு ஈரான் அரசு நிதி, ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருவதாகக் கூறப்படும் நிலையில், 2015-இல் ஏமன் அரசுக்கு ஆதரவாகச் சவூதி அரேபியா தலைமையான கூட்டுப் படைகள் களமிறங்கின. எனினும் ஹவுதிகளின் எழுச்சியை இந்தக் கூட்டுப் படைகளால் தடுக்க முடியவில்லை.

இந்தச் சூழலில் சில மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் சுமந்து செல்லும் கப்பல்கள் மீதும், எரிவாயுக் குழாய்கள் மீதும் ஹவுதிகள் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக, ஏமன் மீது பெரிய அளவிலான தாக்குதலை சவூதி அரேபியா மேற்கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சவூதி அரேபியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து ஹவுதிகளும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

Another attack by the Houthi in saudi arabia
அமெரிக்காவின் வரி அஸ்திரம்.. இந்தியாவுக்கு காத்திருக்கும் இரட்டை சவால்.. தவிக்கும் தொழில்துறை!

அந்த வகையில் நவம்பர் 25-ம் தேதி சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ஏற்றுமதித் தளங்களில் ஒன்றான ஆரம்கோ (Saudi Aramco) நிறுவனத்துக்கு சொந்தமான ராஸ் தனூரா (Ras Tanura) மீது ஹவுதிகள் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து நவம்பர் 26-ம் தேதி மற்றொரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ஜசான் (Jazan) மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் நேபாளத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதல் காரணமாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் 3.5 சதவீதம் உயர்வை சந்தித்து பீப்பாய் 96.33 அமெரிக்க டாலர் என்ற நிலையை எட்டியுள்ளது. கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது இந்தியா உள்ளிட்ட கச்சா எண்ணெய் இறக்குமதி நாடுகளும் ஒரு மோசமான செய்தியாக அமைந்துள்ளது.

எனினும் வரும் ஞாயிற்றுக்கிழமை OPEC பிளஸ் நாடுகளின் கூட்டத்தில் 2027-ஆம் ஆண்டிற்கான கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து விலையை குறைக்கும் நடவடிக்கைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Another attack by the Houthi in saudi arabia
6 நாளில் மொத்தமாக மாறிய இயற்கை : வரலாற்றில் முதல்முறை என ஆய்வாளர்கள் அதிர்ச்சி.. பாதிப்புகள் என்ன?