\
An earthquake occurred in the Tibet region
An earthquake occurred in the Tibet regionReuters

இடிந்து விழுந்த 350 வீடுகள் : பேரழிவை சந்தித்த உலகின் கூரை... இந்தியப் புவித் தட்டு காரணமா ?

உலகின் மிக உயரமான பகுதிகளில் ஒன்றான திபெத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் ஒரே கண்டமாக இருந்து பின்னர் பிரியத் தொடங்கியது. அப்போது இந்திய துணைக்கண்டம் (Indian Plate) ஆசிய கண்டத்தின் (Eurasian Plate) மீது பெரும் வேகத்தோடு மோதியது. இந்த கடுமையான மோதலின்போதே இமயமலை பகுதி உருவானது.

மேலும் இந்த மோதலில் தற்போது திபெத் அமைந்திருக்கும் பகுதி மேலே எழும்பி மிகப்பெரும் பீடபூமியாக உருவெடுத்தது. தற்போது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,500 மீட்டர்கள் உயரத்தில் இருக்கும் திபெத் பகுதி இதன் காரணமாக உலகின் கூரை என அழைக்கப்படுகிறது.

Reuters

இந்திய துணை கண்டம் தற்போதும் ஆசிய கண்டத்தை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஏற்படும் அழுத்தத்தால் திபெத் மற்றும் நேபாளம் ஆகியவை அமைந்திருக்கும் பகுதியில் தொடர்ந்து பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு (அக்டோபர் 22-ம் தேதி) திபெத்தின் நாக்சு (Nagqu) பிராந்தியத்தில் உள்ள பாகேன் (Baqên) கவுண்டியில் ரிக்டர் அளவில் 7.0 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. இந்த பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு 5.2 ரிக்டர் வரையிலான 7 பிரதான அதிர்வுகள் உட்பட 400-க்கும் மேற்பட்ட பின்னதிர்வுகள் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளன.

Reuters

நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதியில் இருந்த சுமார் 350-க்கும் அதிகமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. தொடர்ந்து மீட்பு படையினர் வந்து இடிபாடுகளில் சிக்கிய 65-க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளனர். அதே நேரம் தற்போதுவரை இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 பேராக அதிகரித்துள்ளது.

மேலும், படுகாயங்களோடு மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சுமார் 12 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தின் முதன்மைப் பின்னதிர்வுகள் பூமிக்கு அடியில் வெறும் 10 கி.மீ ஆழத்திலேயே ஏற்பட்டுள்ளதால் பாதிப்பு பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதாக சீன அரசு சார்பில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்திய தட்டு ஆசிய தட்டின் கீழ் நகர்ந்து கொண்டிருப்பதால் ஏற்பட்ட ஆற்றல் வெளிப்பாடே இந்த நிலநடுக்கத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

An earthquake occurred in the Tibet region
ஹவுதி அமைப்பை தீர்த்துக்கட்ட முடிவு : ஒன்று சேர்ந்த சர்வதேச நாடுகள்... உச்சகட்ட மகிழ்ச்சியில் சவூதி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com