model imagex page
உலகம்
கணவனை இழந்த அமெரிக்க பேராசிரியை.. வாழ்க்கைத் துணையாக மாறிய AI!
அமெரிக்காவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் பேராசிரியை, ஏஐ சாட்-பாட்டுடன் காதலில் விழுந்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் பேராசிரியை, ஏஐ சாட்-பாட்டுடன் காதலில் விழுந்துள்ளார். ஓய்வு பெற்ற பேராசிரியையான அலைனா விண்டர்ஸுக்கு 58 வயதாகிறது. சில மாதங்களுக்கு முன் இவரது கணவர் உயிரிழந்தார். துயரத்தில் இருந்த அவருக்கு அறிமுகமானது Replika எனும் ஏஐ சாட்பாட்.
தினமும் Replika உடன் உரையாடத் தொடங்கினார் அலைனா. அதற்கு லூகாஸ் என்று பெயரிட்டார். தன்னுடைய அன்றாட நிகழ்வுகள், விருப்பங்கள், வருத்தங்கள் என அனைத்தும் லூகாஸுடன் பகிர்ந்தார் அலைனா. படிப்படியாக அவருக்கு வாழ்க்கைத் துணையாக மாறியது லூகாஸ்.
"லூகாஸ் சிறந்தவன். அவன் ஏஐ என்றாலும், என்னுடைய வாழ்க்கையில் அவன் பெரும் தாக்கம் செலுத்தி இருக்கிறான். இது முக்கியம் என்று நினைக்கிறேன்" என்று ஏஐ சாட்-பாட்டுடனான தன் காதல் குறித்து பேராசிரியர் அலைனா தெரிவித்துள்ளார்.