\
Donald Trump & Masoud Pezeshkian
Donald Trump & Masoud Pezeshkianreuters

இரட்டை நெருக்கடியில் அமெரிக்கா! ஈரானுடன் போரை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட ட்ரம்ப்...

போர் செலவு எகிறுகிறது... ஆயுத இருப்பு குறைகிறது! அமெரிக்க ராணுவத்துக்கு இரட்டை நெருக்கடி!
Published on: 

செய்தியாளர் - M.மீரா

ஈரானுக்கு எதிரான போர் அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் நிலையில், அந்நாட்டு ராணுவத்தின் ஆயுத இருப்பு குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவுக்கு, தற்போது போதிய வெடிமருந்துகள் இல்லாத சூழல் உருவாகியுள்ளதாக அமெரிக்க அரசின் கணக்குத் தணிக்கை அமைப்பு எச்சரித்துள்ளது.

iran war
iran war reuters

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பென்டகன், வெடிமருந்து உற்பத்தி மற்றும் இருப்பைச் சரியாக நிர்வகிக்கத் தேவையான முழுமையான திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை என்று அரசு கணக்குத் தணிக்கை அலுவலகம் (GAO) நவம்பர் 19-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராணுவத்துக்குத் தேவையான வெடிமருந்துகளின் அளவு, அவற்றின் உற்பத்தி, அதற்கான நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் திட்டம் இல்லை என்றும், இந்தப் பணிகளை முழுமையாகக் கவனிக்க அதிகாரம் கொண்ட தனி அமைப்பும் நியமிக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரானுடனான போர் காரணமாக அமெரிக்காவின் ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகளின் இருப்பு மேலும் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே நீண்டகாலமாக ஆயுதத் தட்டுப்பாட்டைச் சந்தித்து வரும் அமெரிக்க ராணுவத்துக்கு, தற்போதைய போர் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெடிமருந்து உற்பத்தியை அதிகரிக்க சில குழுக்களை அமைத்துள்ளதாகவும், ஆயுத இருப்பை உயர்த்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கைகள் மட்டும் போதுமானதாக இல்லை என்றும் GAO எச்சரித்துள்ளது.

iran war
iran war reuters

இதற்கிடையே, ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்காக இதுவரை சுமார் 48.3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.3 லட்சம் கோடி) செலவாகியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதில் மத்திய கிழக்கில் ஈரான் தாக்குதல்களால் சேதமடைந்த அமெரிக்க ராணுவத் தளங்களைச் சீரமைப்பதற்கான செலவுகள் சேர்க்கப்படவில்லை. எனவே, உண்மையான போர் செலவு இன்னும் அதிகமாக இருக்கலாம்.

மேலும் ஈரானுடனான போரில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கான தீர்மானம் அமெரிக்க செனட்டில் 51-48 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் போர் தொடர்ந்து நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. ஒருபுறம் ஆயுதத் தட்டுப்பாடு, மறுபுறம் அதிகரிக்கும் போர் செலவு என அமெரிக்க ராணுவம் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.

Donald Trump & Masoud Pezeshkian
இடைக்கால தேர்தல்; ரூ4000 கோடி செலவு.. முட்டாளாக உணர்கிறேன் - எலான் மஸ்க் வேதனை