வடகொரியாவுக்கு செக் வைத்த டிரம்ப்.! ஆட்டம் காட்டப்போகும் தென்கொரியா., ரகசியத்தை கக்கும் அமெரிக்கா..?
அமெரிக்க அதிபர் டிரம்ப் தென்கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். தொடர்ந்து, தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்கை சந்தித்துப் பேசினார். அப்போது, தென்கொரியாவுக்கு அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் தொழில்நுட்பத்தை பகிர்வதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்த அறிவிப்பு வடகொரியாவை யோசிக்க வைத்துள்ளது.
தென் கொரியாவில் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்,சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 10 நிமிடங்கள் நீடித்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகள் உறவுகள் குறித்து வரிவிதிப்பு விவகாரம் குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இதனையடுத்து, இரு நாட்டின் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
முன்னதாக, தென்கொரியா அதிபர் லீ ஜே மியுங்கை சந்தித்து பேசினார். அப்போது அமெரிக்கா- தென்கொரியா இடையேயான வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து பேசிய அதிபர் டிரம்ப் " தென்கொரியாவில் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் கட்டுமானத்துக்கு உதவும் வகையில், அமெரிக்கா தன் மிக ரகசியமான தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளும் என அறிவித்தார்.ஆனால், இந்த தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வதற்கானசட்டப்பூர்வ ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும் என்பது குறித்த முழு தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
இதற்கிடையில், அதிபர் டிரம்ப் தென் கொரியா செல்லவிருந்த நேரத்தில் வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை நடத்தி மிரட்டல் விடுத்திருந்தது. இப்படி பரபரப்பான சூழலுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தென்கொரியாவுக்கு அதி நவீன தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ள முன் வந்துள்ள சம்பவம் வடகொரியாவை யோசிக்க வைத்துள்ளது.


