\
Amazon  Plane Crashes in Miami, Five Killed
Flight accident reuters

விமானம் மோதி சிதறிய கார்கள்.. மியாமியில் அதிர்ச்சி.. 5 பேர் உயிரிழப்பு!!

அமெரிக்கா மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் Prime Air Flight 7598 என்ற Boeing 767-300 சரக்கு விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையை மீறி சாலைக்குள் புகுந்து கார்கள் மீது மோதி தீப்பற்றியது.
Published on

செய்தியாளர் : M மீரா

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்துக்காக இயக்கப்பட்ட சரக்கு விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்; மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். Prime Air Flight 7598 என்ற இந்த விமானம், அமேசானுக்காக 21 Air நிறுவனத்தால் இயக்கப்பட்ட Boeing 767-300 ரக சரக்கு விமானமாகும். இது பியூர்டோ ரிக்கோவின் சான் ஜுவானில் இருந்து புறப்பட்டு மியாமி விமான நிலையத்தை நோக்கி வந்தது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் 2 மணியளவில் விமானம் தரையிறங்கியபோது, ஓடுபாதையின் முடிவைக் கடந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் விமானம் அருகிலிருந்த சாலையைக் கடந்து சென்று, அங்கு பயணித்துக் கொண்டிருந்த சில வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தைத் தொடர்ந்து விமானத்தில் தீப்பற்றி, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விமானம் மோதிய வாகனங்களில் சிக்கியிருந்தவர்களையும் மீட்புக் குழுவினர் மீட்டனர்.

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து காரணமாக மியாமி சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான விமானங்கள் தாமதமாகின. சில விமானங்கள் அருகிலுள்ள விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.

விபத்துக்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) விசாரணையைத் தொடங்கியுள்ளன. விமானம் தரையிறங்கியபோது ஏற்பட்ட சூழ்நிலை, ஓடுபாதை மற்றும் வானிலை நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Amazon  Plane Crashes in Miami, Five Killed
உக்ரைன் போர்; தோற்றால் என்னை தூக்கிலிடுவார்கள்! - புதின் அச்சம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com