சையது முஷ்டாக் அலி தொடர்: யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த ரயில்வே அணி வீரர்! 8 சிக்ஸர் விளாசல்

குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற யுவராஜ் சிங்கின் சாதனையை ரயில்வே அணி வீரர் அஷுதோஷ் சர்மா முறியடித்துள்ளார்.
யுவராஜ் சிங், அஷுதோஷ் சர்மா
யுவராஜ் சிங், அஷுதோஷ் சர்மாட்விட்டர்

10 அணிகள் பங்கேற்றுள்ள 13வது ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் நிலையில், அதேநேரத்தில் நடப்பு ஆண்டுக்கான சையது முஷ்டாக் அலி தொடரும் நடைபெற்று வருகிறது. இதில் A, B, C, D, E என 5 பிரிவுகளில் 38 அணிகள் பங்குபெற்றுள்ளன. இதில் A, B, C ஆகிய பிரிவுகளில் தலா 8 அணிகளும், இதர D, E பிரிவுகளில் தலா 7 அணிகளும் பங்குபெற்று விளையாடி வருகின்றன.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்கோப்புப் படம்

இந்த நிலையில், 'C' பிரிவில் இடம்பெற்றுள்ள அருணாச்சல் பிரதேசம் மற்றும் ரயில்வேஸ் ஆகிய அணிகள் இன்று மோதின. இதில் முதலில் ஆடிய ரயில்வேஸ் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்தது. இவ்வணியில் விளையாடிய உபேந்திர யாதவ் 51 பந்துகளில் 6 பவுண்டரி, 9 சிக்ஸர்களுடன் 103 ரன்கள் எடுத்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

மறுபுறம் அவருக்கு துணையாக விளையாடிய அஷுதோஷ் சர்மா, 12 பந்துகளில் 1 பவுண்டரி, 8 சிக்ருடன் 53 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, இன்றைய போட்டியில் அஷுதோஷ் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்தார். அவர், 11 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்மூலம், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை முறயடித்துள்ளார்.

2007 டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் யுவ்ராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். யுவ்ராஜ் சிங்கின் இந்த 16 வருட சாதனையை, நேபாள வீரர் திபேந்திர சிங் அய்ரி, கடந்த மாதம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மங்கோலியாவுக்கு எதிராக முறியடித்தார். அவர் 9 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். தற்போது, அஷுதோஷ் சர்மா 11 பந்துகளில் அரைசதம் அடித்து யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்துள்ளார். இந்தப் போட்டியில் அடுத்து ஆடிய அருணாச்சல பிரதேசம் 18.1 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரயில்வேஸ் அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிக்க: ’பாகிஸ்தானை வீழ்த்த மாந்திரீகரை வைத்து செய்வினை செய்தார்’ - ஜெய்ஷா மீது பாக். பத்திரிகையாளர் புகார்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com