\
Nasscom
Nasscomweb

பணிகளில் பரவலாகும் AI பயன்பாடு.. இயல்பான திறன் குறையும் அபாயம்!

இந்தியாவில் ஏஐ பயன்பாடு வேகமெடுக்கும் நிலையில், ஆழமான பொறியியல் அடிப்படை அறிவு குறைந்து, கருவி சார்ந்த பணியாளர்கள் உருவாகும் அபாயம் குறித்து நாஸ்காம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published on
Summary

இந்தியாவில் ஏஐ பயன்பாடு வேகமாக அதிகரிக்கும் நிலையில், ஆழமான தொழில்நுட்பத் திறன் குறையும் அபாயம் குறித்து நாஸ்காம் எச்சரிக்கிறது. ஏஐயை வெறும் கருவியாக மட்டுமே பயன்படுத்தும், அடிப்படை பொறியியல் அறிவு குறைந்த பணியாளர்கள் உருவாகலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

ஏஐ பயன்பாடு அதிகரிப்பால் இந்தியாவில் பணியாளர்களுக்கு ஆழமான தொழில்நுட்பத் திறன் குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக நாஸ்காம் எச்சரித்துள்ளது. இந்திய மென்பொருள் நிறுவனங்களின் சங்கமான நாஸ்காம் எச்சரித்துள்ளது.

Google Amazon Meta Microsoft spending more on AI
ஏஐஎக்ஸ் தளம்

தொழில்துறையும் கல்வி நிறுவனங்களும் ஆழமான பொறியியல் அடிப்படை அறிவைப் பாதுகாக்கத் தவறினால், உண்மையான ஏஐ தொழில்நுட்பத்தை இயல்பாகவே கையாளும் திறமைசாலிகளை உருவாக்குவதற்குப் பதிலாக, வெறும் ஏஐயை சார்ந்து மட்டுமே இருக்கும் தொழில்நுட்ப பணியாளர்களை உருவாக்கும் அபாயம் உள்ளது என அச்சங்கம் கூறியுள்ளது.

பாரம்பரிய கோடிங் கற்பித்தலைத் தாண்டி, அடிப்படைப் பொறியியல் அறிவு, துறை சார்ந்த கற்றல் மற்றும் நவீன மதிப்பீட்டு முறைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

Nasscom
ஓபன் ஏஐ விவகாரம் | மீண்டும் மோதலில் எலான் மஸ்க் - சாம் ஆல்ட்மேன்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com