\
Elon Musk & Sam Altman
Elon Musk & Sam Altmanweb

ஓபன் ஏஐ விவகாரம் | மீண்டும் மோதலில் எலான் மஸ்க் - சாம் ஆல்ட்மேன்!

ஓபன்ஏஐ வர்த்தக ரகசிய வழக்கைத் தொடர்ந்து, எலான் மஸ்க் – சாம் ஆல்ட்மேன் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
Published on

தொழில்நுட்ப ஆளுமைகளான டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்குக்கும், ஓபன்ஏஐ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனுக்கும் இடையேயான மோதல் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஓபன்ஏஐ நிறுவனம் தனது வர்த்தக ரகசியங்களைத் திருடிவிட்டதாக ஆப்பிள் வழக்குத் தொடர்ந்ததையடுத்து, எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில், ’மோசடி ஆல்ட்மேன்’ என்று விமர்சித்துள்ளார்.

மஸ்க்குக்கு பதிலடி தந்துள்ள ஆல்ட்மேன், எலான் மஸ்க்குக்கு மீண்டும் தன் மீது வெறி பிடித்துள்ளதாக கிண்டல் செய்துள்ளார். சாம் ஆல்ட்மேன் ஓபன்ஏஐ தொடங்கியபோது, அதன் இணை நிறுவனராக இருந்த எலான் மஸ்க் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். அதில் இருந்து இருவருக்கும் மோதல் மூண்டுள்ளது.

Elon Musk & Sam Altman
எலான் மஸ்க் - சாம் ஆல்ட்மேன் மோதல்.. காரணம் இதுதான்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com