பூமியின் அடிப்பரப்பில் டிரில்லியன் டன் ஹைட்ரஜன் - 200 ஆண்டுகள் போதுமானது என விஞ்ஞானிகள் தகவல்
பூமியின் அடி ஆழத்தில் டிரில்லியன் கணக்கான ஹைட்ரஜன் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியின் அடிப்பரப்பில் டிரில்லியன் கணக்கான டன் ஹைட்ரஜன் வாயு மறைந்திருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த இயற்கை வளத்தை திறம்பட பயன்படுத்தினால், 200 ஆண்டுகளுக்கு இந்த பூமியை இயக்க முடியும். இதனால் ஹைட்ரஜனுக்காக புதைபடிவ எரிபொருட்களை சார்ந்திருப்பதை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
பூமிக்கு கீழே சுமார் 6.2 டிரில்லியன் டன் ஹைட்ரஜன் பாறைகள் மற்றும் நிலத்தடி நீர்த்தேக்கங்களில் புதைந்து கிடக்கிறது, இது உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்களை விட அதிகமாக உள்ளது.
இதில் வெறும் 2%, அதாவது சுமார் 124 பில்லியன் டன்கள், வாயுவைப்பயன்படுத்தினாலே இரண்டு நூற்றாண்டுகளுக்கு உலகின் ஹைட்ரஜன் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்கிறார்கள்.
இத்தகைய ஹைட்ரஜன் இயற்கையாகவே பூமியில் நிகழ்கிறது. இந்த நிலத்தடி நீர்த்தேக்கங்கள் எங்கு உள்ளன என்பதை துல்லியமாக சுட்டிக்காட்ட ஆராய்ச்சியாளர்கள் இன்னும் பணியாற்றி வருகின்றனர்.
பூமியானது எப்படி இயற்கையாக ஹைட்ரஜனை உருவாக்குகிறது என்று புவியியல் நிலைமைகளை கண்டறிந்தால், இந்த இயற்கை ஆற்றல் மூலமாக உலகளாவிய தேவையை பூர்த்தி செய்வதிலும், எதிர்கால தேவைக்கும் முக்கியப் பங்காற்ற முடியும்.
ஏற்கனவே பூமியின் மேற்பரப்பில் இருக்கும் ஏரிகள் மலை போன்ற இயற்கை அழிவினால் பூமியானது வெப்பநிலைவேறுப்பாட்டை கொண்டு வருகிறது. இதில் பூமியின் அடி ஆழத்தில் இருக்கும் கனிம மற்றும் இயற்கை வாயுக்களை மனிதனின் தேவைக்காக எடுக்க ஆரம்பித்தால், அது பூமிக்கு அது ஆபத்தாக முடியலாம்