\
A person has died due to a virus that spread from livestock to humans
shamonda virus spread humans Reuters

கால்நடையிலிருந்து மனிதர்களுக்குப் பரவிய வைரஸ் : பாதிக்கப்பட்டவர் உயிரிழந்ததால் அதிர்ச்சி!

கால்நடையிடமிருந்து மனிதர்களுக்கு பரவிய வைரஸ் காரணமாக ஒரு நபர் உயிரிழந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 

1960-களில் நைஜீரியாவில் ஷமோண்டா வைரஸ் (Shamonda Virus) என்ற புதுவகை வைரஸ் மாடுகளுக்கு பரவியிருந்தது கண்டறியப்பட்டது. 'புன்யாவைரஸ்' (Bunyavirus) என்ற வைரல் குடும்பத்தைச் சேர்ந்த இது சிறிய ஈக்கள் அல்லது கொசு போன்ற பூச்சிகள் (Midges) கடிப்பதன் மூலம் மாடுகள், ஆடுகள் மற்றும் குதிரைகள் போன்ற கால்நடைகளை பாதித்து வந்தது.

மேலும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் காய்ச்சல், பால் உற்பத்தி குறைதல், வயிற்றுப்போக்கு மற்றும் நரம்பியல் சார்ந்த பாதிப்புகளால் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுவரை ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் பல கால்நடைகள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டாலும் இதுவரை மனிதர்களுக்கு இது பரவியதாக எந்தவொரு அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை.

கால்நடை
கால்நடைReuters

ஆனால், உலகிலேயே முதன்முறையாக பிரான்ஸ் நாட்டில் ஒரு மனிதருக்கு ஷமோண்டா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்முறையாக ஐரோப்பாவின் பிரான்ஸ் நாட்டில் கடந்த மே மாதம் ஒரு குதிரைக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வைரஸால் பாதிக்கப்பட்ட கால்நடை ஒன்றிலிருந்து மனிதனுக்கு பரவியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்று கருதப்படுகிறது. எனினும் உயிரிழந்த நபர் வேறு சில தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு எதிர்ப்புச் சக்தி குறைவாக இருந்தவர் என்பதால், அவரது இறப்பிற்கு இந்த வைரஸ்தான் நேரடி காரணமா? என்பது குறித்து மருத்துவ ஆய்வுகள் நடந்து வருகின்றன.

கோப்புபடம்
கோப்புபடம்Reuters

இந்த வைரஸ் பல ஆண்டுகளாகக் கால்நடைகளிடையே பரவி வந்த போதிலும், மனிதருக்குத் தொற்றியிருப்பது இதுவே முதல்முறை என்பதால், இது மனிதர்களுக்குப் பரவும் வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு இந்த வைரஸ் பரவுவதற்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை இல்லை என்பதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் பிரான்ஸ் அரசின் சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

A person has died due to a virus that spread from livestock to humans
ஹவுதி அமைப்பை தீர்த்துக்கட்ட முடிவு : ஒன்று சேர்ந்த சர்வதேச நாடுகள்... உச்சகட்ட மகிழ்ச்சியில் சவூதி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com