\
Manchester City scam confirmed by government
Manchester City FC scamReuters

விளையாட்டு உலகின் மிகப்பெரிய ஊழல்: Haaland போன்ற நட்சத்திர வீரர்களுக்கு தொடர்பா? ரசிகர்கள் அதிர்ச்சி

கால்பந்து உலகின் நட்சத்திர கிளப்களில் ஒன்று ஆயிரக்கணக்கான கோடிகள் அளவு ஊழல் செய்ததாக வெளிவந்துள்ள குற்றச்சாட்டு கால்பந்து உலகை அதிரவைத்துள்ளது.
Published on: 

கால்பந்து உலகின் நம்பர் 1 லீக்காக இங்கிலாந்தின் பிரிமியர் லீக் பல ஆண்டுகளாக கோலோச்சி வருகிறது. இந்த லீக்கின் முக்கிய அணிகளில் ஒன்றான மான்செஸ்டர் சிட்டி அணி ஒரு காலத்தில் சாதாரண அணியாகவே இருந்தது. இந்த அணியை கடந்த 2008-ஆம் ஆண்டு அபுதாபி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் மன்சூர் கையகப்படுத்தினார்.

அதன்பின்னர் இந்த அணியில் பல்வேறு முதலீடுகளை அவர் மேற்கொண்ட நிலையில், ரொபின்கோ (Robinho ) , கார்லோஸ் தேவெஸ் (Carlos Tevez) , செர்ஜியோ அகுவேரோ (Sergio Agüero) , கெவின் டி புரூய்னே (Kevin De Bruyne ), எர்லிங் ஹாலாண்ட் (Erling Haaland ) போன்ற நட்சத்திர வீரர்கள் வாங்கப்பட்டார்கள். அதோடு இந்த முதலீட்டுக்கு பின்னர் மான்செஸ்டர் சிட்டி அணி பிரீமியர் லீக், சாம்பியன்ஸ் லீக் போன்ற கோப்பைகளை வென்று கால்பந்து அரங்கில் ஆதிக்கம் செலுத்தியது.

Manchester
ManchesterReuters

பிரீமியர் லீக்கின் விதிகளின்படி, ஒரு கிளப், தான் ஈட்டும் வருவாய்க்கு ஏற்பவே வீரர்களை வாங்கிச் செலவழிக்க முடியும். ஆனால் மான்செஸ்டர் சிட்டி அணியின் உரிமையாளர் ஷேக் மன்சூர், கிளப் பணத்தை தாண்டி தனது சொந்தப் பணத்தை ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் மூலம் கிளப்பிற்குச் செயற்கையாகப் பல நூறு கோடிகளை வருவாயாக வழங்கியதாக கடந்த 2018-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், அணியின் வீரர்கள் மற்றும் மேலாளர்களும் சம்பளம் தாண்டி, வேறு வகையில் வருவாய் வாய்ப்புகளை அளித்து அவர்களை அணியில் விளையாட வைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. சுமார் 8 ஆண்டுகள் தொடர்ந்த இந்த வழக்கில் தற்போது மான்செஸ்டர் சிட்டி அணி மீதான குற்றசாட்டுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் பல ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

haaland, guardiola
haaland, guardiolaReuters

மேலும், மான்செஸ்டர் சிட்டி அணி மீதான 115 குற்றச்சாட்டுகளில் 114 குற்றசாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும் நட்சத்திர வீரர் ஹாலந்து (erling Haaland ), முன்னாள் நட்சத்திர பயிற்சியாளர் பெப் கார்டியோலா (Pep Guardiola ) போன்றோரும் விசாரிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய விளையாட்டு செய்தி நிறுவனங்கள் இந்த விவகாரத்தை விளையாட்டு உலகின் மிகப்பெரிய ஊழல் என வர்ணித்துள்ளன. இதன் காரணமாக மான்செஸ்டர் சிட்டி அணிக்கு புள்ளி குறைப்பு, பிரீமியர் லீக் தொடரிலிருந்து கீழ் மட்ட தொடருக்கு தகுதியிறக்கம், பல நூறு கோடிகள் வரை அபராதம் போன்ற தண்டனைகள் வழங்கப்படலாம் என்றும், குற்றம் சாட்டப்பட்ட ஆண்டுகளில் மான்செஸ்டர் சிட்டி வென்ற பிரீமியர் லீக் கோப்பைகள் மற்றும் பட்டங்கள் திரும்பப் பெறப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் கால்பந்து ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Manchester City scam confirmed by government
112 ஆண்டில் இதுதான் முதல்முறை : இயற்கையில் நிகழ்ந்த அசாதாரண மாற்றம்.. ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள் !
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com