\
A key party has withdrawn from Netanyahus coalition
A key party has withdrawn from Netanyahus coalitionReuters

இஸ்ரேல் தேர்தலில் திருப்பம்.. முடிவுக்கு வந்த நெதன்யாகுவின் சகாப்தம்.. காலை வாரிய கூட்டணி கட்சி!

இஸ்ரேல் தேர்தலில் அதிரடி திருப்பமாக அரபு கட்சிகள் முக்கிய முடிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெதன்யாகுவின் கூட்டணியில் இருந்து முக்கிய கட்சி விலகியுள்ளது.
Published on: 

இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்-க்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) வலதுசாரி கூட்டணி 53 இடங்களிலும், காடி ஐசென்காட் (Gadi Eisenkot) தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 48 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

Reuters

அதேநேரம், இந்த இரு கூட்டணிகளையும் சாராத அரபு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜாய்ண்ட் லிஸ்ட் (joint List ) மற்றும் ராம் (Raam) கட்சிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 61 இடங்களை வெல்லும் கட்சியே ஆட்சியமைக்கும் என்ற சூழலில், எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இஸ்ரேலில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Haredi Jews
Haredi JewsReuters

இந்த நிலையில், அரபுப் கட்சியான 'ஜாயிண்ட் லிஸ்ட்' (Joint List) இஸ்ரேலின் அடுத்த பிரதமராக ஐசென்கோட் பொறுப்பேற்க (Gadi Eisenkot) தங்கள் ஆதரவை வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் மற்றொரு அரபு கட்சியான 'ராம்' (Ra’am) கட்சியும், காடி ஐசென்கோட்டைப் பிரதமர் வேட்பாளராக பரிந்துரைப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதனால் தற்போது ஐசென்கோட் ஆட்சியமைக்க 67 இடங்கள் கிடைத்துள்ளது. ஐசென்கோட் தலைமையில் உள்ள சில தலைவர்கள் அரபு கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதை விரும்பவில்லை என்று கூறப்பட்டாலும் விரைவில் சுமுக முடிவு ஏற்பட்டு அவர் விரைவில் இஸ்ரேல் பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரம் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணியில் இடம்பிடித்து 4 இடங்களில் வென்றிருந்த டெகல் ஹதோரா (Degel HaTorah) கட்சி யாரையும் பிரதமர் வேட்பாளராக ஏற்கப்போவதில்லை என்று கூறியுள்ளது. ஹரேடி ஆண்கள் எனப்படும் பழமைவாத யூதர்களுக்கு ராணுவ சேவையிலிருந்து விலக்கு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றுவதில் நெதன்யாகுவின் கூட்டணி தவறியதால் இந்த முடிவை அக்கட்சி எடுத்துள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.

A key party has withdrawn from Netanyahus coalition
இத்தனை ஆண்டுகள் ஏமாற்றியதா பெப்சி? மத்திய அரசு பகிரங்க குற்றச்சாட்டு.. நீதிமன்றத்தில் நடந்தது என்ன?