\
The US announcement is seen as a major blow to Ukraine
Ukraine Russia warReuters

நம்பினால் இதுதான் கதி.. உக்ரைனின் முதுகில் குத்திய அமெரிக்கா.. நடந்தது என்ன?

அமெரிக்காவை நம்பி உக்ரைன் போரை தொடங்கிய நிலையில், தற்போது அமெரிக்காவின் அறிவிப்பு உக்ரைனுக்கு பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.
Published on: 

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனில் ஆட்சிக்கு வந்த ஜெலன்ஸ்கி உக்ரைனை நேட்டோவில் இணைக்க முயன்றார். ஆனால் இதனை ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாக பார்த்த ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீது படையெடுத்தார்.

இதனைத் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக வந்த நேட்டோவில் உறுப்பினராக உள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஏராளமான ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இதனால் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட போர் 4 ஆண்டுகள் தாண்டியும் தொடர்ந்து வருகிறது.

Reuters

இந்தப் போர் காரணமாக உக்ரைனின் பெரும் பகுதி ரஷ்ய தாக்குதலால் அழிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பேரழிவில் இருந்து மீளவே உக்ரைனுக்கு பல ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. ஆனால், எதற்காக ரஷ்யாவை பகைத்து அந்த நாட்டோடு யுத்தம் மேற்கொள்ளும் நிலைக்கு உக்ரைன் சென்றதோ, அதற்கு வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்துக்குச் சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio) செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் உக்ரைன் நாட்டை நேட்டோ (NATO) அமைப்பில் உறுப்பினராகச் சேர்ப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Marco Rubio
Marco RubioReuters

அதற்குப் பதிலளித்த அவர், அமெரிக்க நிர்வாகத்தின் தற்போதைய முதன்மையான நோக்கம் நேட்டோ அமைப்பை விரிவாக்குவது அல்ல என்றும், மாறாக, உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே நடந்து வரும் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவதில் மட்டுமே அமெரிக்கா உறுதியான கவனம் செலுத்தி வருகிறது என்றும் கூறினார்.

மேலும், உக்ரைனை நேட்டோ (NATO) அமைப்பில் உறுப்பினராகச் சேர்ப்பது குறித்த எந்த பரிசீலனையும் எங்கள் மேடையில் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். உக்ரைன் நேட்டோவில் சேர்த்துக்கொள்ளப்படும் என அமெரிக்கா உறுதி அளித்ததன் பேரிலேயே உக்ரைன் அதற்கான விண்ணப்பத்தைச் செய்தது என்றும், அதுவே ரஷ்யா - உக்ரைன் போருக்கு ஒரு முக்கியக் காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனால், தற்போது உக்ரைனை நேட்டோவில் சேர்ப்பது பரிசீலனையில் இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளதன் மூலம் உக்ரைனின் முதுகில் அமெரிக்கா குத்திய செயலாகவே இது பார்க்கப்படுகிறது.

The US announcement is seen as a major blow to Ukraine
ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு : கடன் வாங்கியவர்களுக்கு சிக்கல்.. சாமானிய மக்களுக்கு பாதிப்பா?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com