\
red card
red cardani

களேபரமான மைதானம்.. ஒரே போட்டியில் 53 ரெட் கார்டுகள்! மோசமான சாதனை படைத்த சம்பவம்!

கால்பந்து போட்டியில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலைத் தொடர்ந்து, ஒரே போட்டியில் 53 ரெட் கார்டுகள் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 
Summary

பிரேசிலில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் 53 ரெட் கார்டுகள் வழங்கப்பட்ட சம்பவம் உலக சாதனையாக மாறியது. வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதல் மைதானத்தை போர்க்களமாக மாற்றியது.

கால்பந்து போட்டியில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலைத் தொடர்ந்து, ஒரே போட்டியில் 53 ரெட் கார்டுகள் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கால்பந்து வரலாற்றில் நடைபெற்ற இந்தச் சம்பவம் உலக சாதனையாகவும் மாறியுள்ளது. அப்படி என்னதான் நடந்தது? ஒரே போட்டியில் இத்தனை ரெட் கார்டுகள் வழங்கப்பட்டதற்கு என்ன காரணம்? பார்க்கலாம்.

foot ball
foot ballreuters

பொதுவாக, கால்பந்து போட்டிகளில் வீரர்கள் விதிமுறைகளை மீறினாலோ, எதிரணி வீரர்களிடம் கடுமையாக நடந்துகொண்டாலோ நடுவர்கள் மஞ்சள் அல்லது சிவப்பு அட்டைகளை வழங்குவது வழக்கம். குறிப்பாக, ஒரு வீரருக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டால், அவர் உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேற்றப்படுவார். ஆனால், பிரேசிலில் நடைபெற்ற ஒரு கால்பந்து போட்டியில் வீரர்கள் மட்டுமின்றி, பயிற்சியாளர்கள் மற்றும் அணியின் நிர்வாகிகளுக்கும் சிவப்பு அட்டை வழங்கப்பட்ட சம்பவம் தற்போது உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளது.

பிரேசிலின் மினாஸ் ஜெரைஸ் மாகாணத்தில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டியில்தான் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்தப் போட்டியின் இரண்டாம் பாதியில், ஒரு அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. அப்போது, அந்த அணியின் வீரர் ஒருவர் கோல் அடித்ததைக் கொண்டாடும் விதமாக, எதிரணி வீரர்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கிக் கிண்டல் செய்யும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த எதிரணியின் கோல்கீப்பர், அந்த வீரரைத் தாக்கியுள்ளார். இதையடுத்து, இரு அணிகளின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு இடையே கடுமையான மோதல் வெடித்தது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதால், போட்டி நடைபெற்ற மைதானமே போர்க்களம் போலக் காட்சியளித்துள்ளது.

red card
red cardreuters

இந்தச் சூழலில், மோதலில் ஈடுபட்ட 43 வீரர்கள், இரு அணிகளின் பயிற்சிக் குழுவைச் சேர்ந்த 8 பேர் மற்றும் அணியின் நிர்வாகிகள் என மொத்தம் 53 பேருக்கு நடுவர்ரெட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, 2011ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் நடைபெற்ற கால்பந்து லீக் போட்டியில் 36 சிவப்பு அட்டைகள் வழங்கப்பட்டதே சாதனையாக இருந்தது. தற்போது, பிரேசிலில் நடைபெற்ற இந்தச் சம்பவம் அந்தச் சாதனையை முறியடித்துள்ளது. இதன் மூலம், ஒரே போட்டியில் அதிக எண்ணிக்கையிலான சிவப்பு அட்டைகள் வழங்கப்பட்ட போட்டி என்ற மோசமான சாதனை படைக்கப்பட்டுள்ளது.

red card
சொந்த நாட்டிலேயே அவமரியாதை.. ஓய்வை அறிவித்த ஜாம்பவான் ரொனால்டோ! உலகம் பார்க்காத கதை!