சீனாவை அலறவிட்ட இயற்கை.. மீண்டும் இன்னொரு பேராபத்து.. மிரண்டு ஓடிய மக்கள்!!
செய்தியாளர் - கார்த்திகேயன்
நோபாளம் நாட்டின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோஷி ஆற்றில், கடந்த ஆகஸ்டு 26-ம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையின் கோரத்தாண்டவத்தால், ரசுவா, ரசுவாகடி, திமுரே ஆகிய பகுதிகளும், திரிசூலி நதியை ஒட்டியுள்ள இடங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், 1,500-க்கும் மேற்பட்டோர் காணாமால் போனதாகவும், அவர்களை தேடும் பணியில், நேபாளம், சீனா, இந்தியாவின் மீட்பு படையினர் மும்மரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த பெரு வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின் தழும்புகளே இன்னும் மறையாத சூழலில், சீனாவில் இன்னொரு பேராபத்து ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தின் லோங்சாங் நகரில், 5.1 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமியின் ஆழத்தில் 13 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று, சீனாவின் நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக, நோபளத்தில் நிலவி வரும் வெள்ளப் பாதிப்புகளும், பேரிடர் அபாயங்களும் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக திபெத் எல்லை பகுதியில் உள்ள அணையில் இருந்து நீர் அதிகளவில் வெளியேறி, புதிய வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், மீட்பு பணிகள் தாமதமாகும் என்றும் சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது.

