யானைகள்pt web
உலகம்
இலங்கையில் நடப்பாண்டில் 350 யானைகள் உயிரிழப்பு: வனத்துறை அறிக்கை
இலங்கையில் நடப்பாண்டில் 350 யானைகள் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு வனத் துறை தெரிவித்துள்ளது.
இலங்கை பதுளை மாவட்டம் கிராந்துருகோட்டை, திப்பிட்டிய பகுதியில் யானை ஒன்று ஐயத்திற்கு இடமளிக்கும் வகையில் உயிரிழந்திருப்பதாக வனத் துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. நிகழ்விடத்திற்குச் சென்ற வனத்துறையினர் யானையின் உடலை மீட்ட நிலையில், மின்சாரம் தாக்கியோ அல்லது துப்பாக்கி சூட்டிலோ உயிரிழந்திருக்க கூடும் என தெரிவித்தனர்.
யானைகள் முகநூல்
இதுதொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள வனத் துறை, மனித - யானை மோதல்கள், ரயில்களில் மோதி இறப்பது உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு அதிகளவு யானைகள் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தனர். இப்படி இலங்கையில் நடப்பாண்டில் 350 யானைகள் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு வனத் துறை தெரிவித்துள்ளது.