யானைகள் உயிரிழப்பு
யானைகள் உயிரிழப்புpt desk

இலங்கை| காட்டு யானை கூட்டத்தின் மீது ரயில் மோதி விபத்து - 2 யானைகள் உயிரிழப்பு

மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில், காட்டு யானைக் கூட்டத்துடன் மோதிய விபத்தில் இரு யானைகள் உயிரிழந்துள்ளன. ரயில் தடம் புரண்டதால் மட்டக்களப்புக்கான ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
Published on

கொழும்பு - மட்டக்களப்பு ரயில் மார்க்கத்தில் மட்டக்களப்பு நோக்கி இன்று (18.10.2024) அதிகாலை எரிபொருள் ஏற்றிக் கொண்டு ரயில் சென்றுள்ளது. அப்போது பொலநறுவை மாவட்டத்தின் மின்னேரிய மற்றும் ஹிகுராக்கொட ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ரயில் சென்றபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைக் கூட்டத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

சேதமடைந்த தண்டவாளம்
சேதமடைந்த தண்டவாளம்pt desk

இந்த விபத்தில் மேலும் சில காட்டு யானைகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தண்டவாளத்திற்கு பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரயிலின் நான்கு வேகன்கள் தடம்புரண்ட நிலையில், மட்டக்களப்புக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் பல்வேறு சம்பவங்களில் 277 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யானைகள் உயிரிழப்பு
தேனி: சுகாதார சீர்கேடு... வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவன் உயிரிழப்பு!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com