\
American base
American basereuters

அமெரிக்காவை சிதறடித்த 274 தாக்குதல்கள்.. ஈரானின் அதிரடி ‘Strike Strategy’!

அமெரிக்க ராணுவ தளங்களை சிதறடித்த ஈரானின் அதிநவீன தாக்குதல் உத்தி!
Published on: 
Summary

மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் நடத்திய 274 தாக்குதல்களில், அதிநவீன ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பில்லியன் டாலர் மதிப்பிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகள் முடக்கப்பட்டதால், முக்கிய தளங்கள் மற்றும் தளவாடங்களை மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது.

செய்தியாளர் - M.மீரா

மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் நடத்திய அதிநவீன ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள், அமெரிக்காவின் தற்காப்பு அரண்களை உடைத்து பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. அசோசியேட்டட் பிரஸ் (AP) மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) ஆகிய ஊடகங்கள் வெளியிட்ட செயற்கைக்கோள் புகைப்பட ஆய்வுகளின்படி, ஈரானின் இந்த புதிய தாக்குதல் உத்தி அமெரிக்க ராணுவ வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

ஈரான் தனது தாக்குதல்களை வெறும் எண்ணிக்கையின் அடிப்படையில் நடத்தாமல், மிகவும் திட்டமிட்டு துல்லியமாக மாற்றியமைத்துள்ளது.

American base
American base reuters

ஈரானின் தாக்குதல் உத்தி (Shifting Strategy)

ஈரான் தனது முதல் கட்ட தாக்குதலில் அமெரிக்க தளங்களின் முன்கூட்டியே எச்சரிக்கும் ரேடார் அமைப்புகள் (Early-warning radars) மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை குறிவைத்து அழித்தது. இதன் மூலம் அமெரிக்காவால் அடுத்தடுத்து வரும் ஏவுகணைகளைக் கண்டறிந்து தடுக்கும் திறன் முடக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக பாதுகாப்பு அரண்கள் தகர்க்கப்பட்ட பிறகு, ஈரான் தனது தாக்குதலை போர் விமானங்கள் நிறுத்தப்படும் ஹேங்கர்கள், எரிபொருள் கிடங்குகள் மற்றும் தகவல் தொடர்பு மையங்களை நோக்கி திருப்பியது.

மூன்றாவது கட்டமாக ஜூலை மாதத்திற்குப் பிறகு ஈரானின் உத்தி மேலும் மாறியது. அமெரிக்க படைவீரர்கள் தங்கும் முகாம்கள் (Troop Housing), உணவுக்கூடங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களை ஈரான் துல்லியமாகத் தாக்கியது.

செயற்கைக்கோள் தரவுகளின்படி, மத்திய கிழக்கில் உள்ள 24-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ தளங்களில் சுமார் 274 கட்டமைப்புகள் (Structures) சேதமடைந்துள்ளன அல்லது முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.

குவைத்தில் உள்ள 'அலி அல் சலேம்' (Ali Al Salem) விமான தளம் மட்டுமே 30-க்கும் மேற்பட்ட முறை தாக்கப்பட்டு, அங்கிருந்த 15 விமான ஹேங்கர்கள் அழிக்கப்பட்டன. ஜோர்டானில் உள்ள 'முவாஃபக் சால்டி' (Muwaffaq Salti) தளத்தில் வீரர்கள் தங்கியிருந்த 19 கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன.

பில்லியன் டாலர் மதிப்புள்ள போயிங் E-3 சென்ட்ரி (Boeing E-3 Sentry) உளவு விமானம் உட்பட குறைந்தது 15 அமெரிக்க விமானங்கள் இந்த தாக்குதல்களில் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பென்டகன் அதிகாரிகளின் ஆரம்பக்கட்ட மதிப்பீட்டின்படி, இந்த கட்டிடங்கள் மற்றும் தளங்களை மறுசீரமைக்க மட்டுமே 5 பில்லியன் டாலர் முதல் 15 பில்லியன் டாலர் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Us base
Us base reuters

மலிவு விலை ட்ரோன்கள் மற்றும் துல்லியமான ஏவுகணைகள் மூலம் அமெரிக்காவின் அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளை ஈரான் முடக்கியுள்ளது, . இந்த கடுமையான சேதங்கள் காரணமாக, பாரசீக வளைகுடா பகுதியில் உள்ள தனது முக்கிய ராணுவ தளங்களையும், தளவாடங்களையும் ஈரான் ஏவுகணைகளின் எல்லையிலிருந்து வெகு தொலைவிற்கு மாற்றியமைக்கும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.

American base
லிஸ்ட் போட்டு தட்டித்தூக்க ரெடியாகும் ஈரான்... ஆபத்தில் 8 நாடுகள்!