அமெரிக்கப் பேராசிரியருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு! யார் இந்த கிளாடியா கோல்டின்?

2023-ம் ஆண்டு, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
claudia goldin
claudia goldintwitter

உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது, ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்த 2-ஆம் தேதி முதல் மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றுக்கான நோபல் பரிசுகள் அடுத்தடுத்த நாட்களில் அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மட்டும் அக். 9ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க பேராசிரியர் கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

claudia goldin
’13 முறை கைது, 154 கசையடிகள்.. 31 ஆண்டு சிறை’ - அமைதிக்கான நோபல் பரிசை வென்ற ஈரான் போராளிப் பெண்!

தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ள செய்தியில், ’2023 ஆல்பிரட் நோபலின் நினைவாக வழங்கப்படும் பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் பரிசு, பெண்களின் தொழிலாளர் சந்தை விளைவுகளைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தியதற்காக கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அறிஞர் கிளாடியா கோல்டின் தொழிலாளர் சந்தையில் பெண்களின் வாய்ப்புகளைப் பாதிக்கும் காரணிகள் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு எவ்வளவு தேவை உள்ளது என்பதைப் பற்றிய ஆழமான புரிதலை வழங்கியுள்ளார்.

பெண்கள் பெரும்பாலும் திருமணம், வீடு, குடும்பப் பொறுப்புகள் ஆகியவற்றிற்கு உள்ளேயே அடக்கிவைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் இதில் மாற்றம் உண்டாவதற்கு நேரம் எடுக்கும் என்றும் கோல்டினின் ஆய்வுகள் கூறுகின்றன என நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தில் கிளாடியா கோல்டினின் நுண்ணறிவு அமெரிக்காவுக்கும் மட்டுமின்றி, எல்லைகளைக் கடந்து பல நாடுகளைச் சென்றடைகிறது எனவும் அவரது ஆராய்ச்சி நேற்று, இன்று, நாளை என தொழிலாளர் சந்தைகளைப் பற்றிய சிறந்த புரிதலை நமக்குத் தருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளது.

யார் இந்த கிளாடியா கோல்டின்?

1946ஆம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த கிளாடியா கோல்டின், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். பெண்களின் வருவாய் மற்றும் தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கு குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளார்.

ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் விழாவில், இதில் தேர்வு பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

இதையும் படிக்க: ’அடடே.. சிக்ஸ் போய்விட்டதே..’ கவலைப்பட்ட கே.எல்.ராகுல்! கலகலப்பான ஆடியன்ஸ்.. பின்னணி இதுதான்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com