10 வயது சிறுவன் உயிரிழப்பு
10 வயது சிறுவன் உயிரிழப்புpt desk

தேனி: சுகாதார சீர்கேடு... வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவன் உயிரிழப்பு!

பெரியகுளம் அருகே குடிநீர் மற்றும் சுகாதார சீர்கேட்டால் 10 வயது சிறுவன் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், மேலும் ஐந்து சிறுவர்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Published on

செய்தியாளர்: அருளானந்தம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கரமூர்த்திபட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் - ரம்யா தம்பதியர். இவர்களது 10 வயது மகன் மோகித் குமார் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த எட்டு நாட்களாக சிறுவன் மோகித் குமார் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு உயிரிழந்தார்.

பாதிக்கப்பட்ட கிராமம்
பாதிக்கப்பட்ட கிராமம்pt desk

இதையடுத்து சிறுவனின் உடல், சங்கரமூர்த்திபட்டி கிராமத்தில் வைக்கப்பட்டு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அங்கு வந்த மக்கள் பலரும், சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமாக “எங்கள் கிராமத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் பைப், சாக்கடை நீர் செல்லும் வாய்க்காலில் பதிக்கப்பட்டுள்ளதால் பல நேரங்களில் சாக்கடை நீர் கலந்து வழங்கப்படுகிறது. தற்பொழுது சிறுவன் உயிரிழப்புக்கு காரணம் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வழங்கியதுதான்” என குற்றம் சாட்டினர்.

10 வயது சிறுவன் உயிரிழப்பு
தண்ணீர் பற்றாக்குறையால் ஏழை நாடுகள் அதிக பாதிப்பு... ஆய்வறிக்கையில் தகவல்!

மற்றொருபுறம் மேலும் ஐந்து சிறுவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே 22 சிறுவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல்நலம் பெற்று வீடு திரும்பி உள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

சுகாராரமற்ற குடிநீர்
சுகாராரமற்ற குடிநீர்pt desk

“இது தொடர்பாக பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்பொழுது ஒரு சிறுவன் உயிரிழந்துவிட்டார். இனியாவது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கிராம மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல் துறையினரை கிராம மக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

10 வயது சிறுவன் உயிரிழப்பு
அரியலூர்|“கடன கேட்டு டார்ச்சர் செய்றாங்க..”-வீடியோ வெளியிட்டு விபரீத முடிவு எடுத்த தேமுதிக நிர்வாகி!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com