“மனிதாபிமான அடிப்படையில் காஸாவில் போரை நிறுத்த ஐநா தீர்மானம்” - இந்தியா உட்பட 153 நாடுகள் ஆதரவு!

காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்திய தீர்மானம், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவோடு ஐநா பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
gaza
gazapt desk

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் 2 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. போரை நிறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ஐநா பொதுச்சபையின் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. மனிதாபிமானம் கருதி போரை உடனே நிறுத்துவதுடன் பிணயக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எகிப்து கொண்டு வந்தது.

இஸ்ரேல்
இஸ்ரேல் file image

இத்தீர்மானத்தை ஆதரித்து இந்தியா உட்பட மொத்தம் 153 நாடுகள் வாக்களித்தன. 10 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 23 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இத்தீர்மானத்தில் ஹமாஸ் இயக்கத்தின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 15 உறுப்பினர்கள் கொண்ட ஐநா பாதுகாப்பு சபையில் போர் நிறுத்தம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் 13 வாக்குகளை பெற்று தோல்வியடைந்திருந்தது.

gaza
இஸ்ரேல் ஹமாஸ் போர்: காஸாவில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் தரைமட்டம்!

அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியதால் தீர்மானம் நிறைவேறவில்லை. இஸ்ரேல் -ஹமாஸ் மோதலில் இதுவரை சுமார் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இதுதவிர, சுமார் 50 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com