இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் காஸா மீது தொடர்ச்சியாக வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. தாக்குதலில் நிலைகுலைந்துள்ள காஸாவிலிருந்து ஏராளமான மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
மேலும் காஸாவில் மட்டும் இதுவரை 18,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்னர். ஏவுகணை தாக்குதலில் காஸா முழுவதும் கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்நிலையில் போருக்கு பிந்தைய காஸாவின் புகைப்படத்தை ஐக்கிய நாடுகள் சபையின் செயற்கைகோள் மையம் துல்லியமாக படமெடுத்துள்ளது. அதில் சுமார் 40 - 45 ஆயிரத்துக்கும் அதிகமான கட்டடங்கள் காஸாவில் தரைமட்டமாகியுள்ளதாக ஐ.நா. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காஸாவிலிருந்து 85 சதவிகிதம் மக்கள் தங்கள் சொந்த வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஐ.நா. புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. காஸா மற்றும் வடக்கு காஸாவில் மட்டும் 80 சதவீத கட்டங்கள் சேதமடைந்துள்ளதாகவும் ஐ.நா. செயற்கைகோள் மையம் தெரிவித்துள்ளது