பாரிஸ்முகநூல்
உலகம்
யூத வெறுப்பு காரணமாக 12 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - பிரான்ஸ் தலைநகரில் வெடித்த போராட்டம்!
யூத இன சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் போராட்டங்கள் வெடித்தன.
பாரிஸில் 12 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யூத இனத்திற்கு எதிரான கருத்துகளைக் கூறி தன்னை அவமானப்படுத்தியதாகவும் அச்சிறுமி புகார் அளித்திருந்தார்.
பாலியல் வன்கொடுமைFreepik
இது தொடர்பாக சிலரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பாரிஸில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரான்ஸில் தலைதூக்கி வரும் யூத இனத்திற்கு எதிரான பரப்புரையைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.