Haj yatrapt desk
உலகம்
சவுதி அரேபியா: கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 900ஐ தாண்டியது
சவுதி அரேபியாவில் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்த ஹஜ் பயணியரின் எண்ணிக்கை 900க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதில், 80க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என்ற தகவலும் கவலையடைய செய்துள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதினா சென்ற ஹஜ் பயணிகள் அங்கு நிலவும் மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டிருப்பதால், போதுமான வசதிகள் இன்றி ஹஜ் பயணிகள் அவதியுற்று வருகின்றனர்.
Haj yatrapt desk
போதுமான அறைகள் இல்லாததால், கடும் வெப்பம் காரணமாக ஹீட் ஸ்டோர்க் உள்ளிட்ட பிரச்னைகளால் அவர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
கடும் வெப்பத்தால் உயிரிழந்த ஹஜ் பயணியரின் எண்ணிக்கை 900ஐ கடந்துள்ளது. பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.