\
djibouti boat accident 109 dead
djibouti boat accident 109 deadfile photo

350 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து.. 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி!

ஜிபூட்டி கடற்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டத்தில் 15 குழந்தைகள் உட்பட 109 புலம்பெயர்ந்தோர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 
Summary

ஜிபூட்டியில் இருந்து ஏமனுக்கு புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 குழந்தைகள் உட்பட 109 பேர் உயிரிழந்தனர். 116 பேர் மாயமாகியுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்கின்றன.

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய நாடான ஜிபூட்டி கடற்பகுதியில் அக்டோபர் 8 மற்றும் 9ஆம் தேதி இடைப்பட்ட இரவில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 15 குழந்தைகள் உட்பட குறைந்தது 109 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 116 பேர் மாயமாகியுள்ளனர் என சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு தெரிவிப்பதாக ஐ.நா. முகமை தெரிவித்துள்ளது.

ஜிபூட்டியில் இருந்து ஏமனுக்கு சுமார் 350 பேரை ஏற்றிச் சென்ற அந்தப் படகு, ஜிபூட்டியின் ஓபோக் நகருக்கு வடக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகத் தப்பியவர்கள் கூறியுள்ளனர். உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் அவசரகால உதவிகளை வழங்கி வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

djibouti boat accident 109 dead
மலேசியா அருகே படகு கவிழ்ந்து விபத்து| மியான்மர் அகதிகள் 100 பேர் மாயம்; பின்னணியில் வரலாற்று பிரச்னை
djibouti boat accident 109 dead
கேரளாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 20 பேர் காயம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com