இம்ரான் கான்
இம்ரான் கான்கோப்புப் படம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

இம்ரான்கான் மற்றும் அவரின் துணைத் தலைவர் மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மீதான ஊழல் வழக்கு நிரூபனமானதை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல அரசு ரகசியங்களை கசியவிட்டதாகவும் அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கில் ஜாமீன் வழங்க கோரி அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்திருந்தார். இதில் இம்ரான்கான் மற்றும் குரேஷிக்கு ஜாமீன் வழங்கி ரூ.10 லட்சம் பிணைத் தொகை செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இம்ரான் கான்
தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம்; ஆனாலும் இம்ரான் கான் சிறையிலிருந்து விடுதலையாவதில் சிக்கல்!

இந்நிலையில் அரசின் ரகசியங்களை கசிய விட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவினை பிறப்பித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com